ஆரணி 54, செய்யாறு 29, வந்தவாசி 18 பேர் உள்பட 101 பேருக்கு கரோனா தொற்று

செய்யாறு சுகாதார மாவட்டத்தைச் சேர்ந்த ஆரணியில் 54 பேருக்கும், செய்யாறில் 29 பேருக்கும், வந்தவாசியில் 18 பேர் உள்பட 101 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதியானது.
கரோனா பரிசோதனை
கரோனா பரிசோதனை

செய்யாறு சுகாதார மாவட்டத்தைச் சேர்ந்த ஆரணியில் 54 பேருக்கும், செய்யாறில் 29 பேருக்கும், வந்தவாசியில் 18 பேர் உள்பட 101 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதியானது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்று கட்டுப்படுத்தும் விதமாக வெளியூர்களிலிருந்து தங்கியவர்கள் கரோனா தொற்று உடையவர்களின் தொடர்பில் இருந்தவர்கள் எனக் கண்டறியப்பட்ட 988 பேருக்கு ஜூன் 28, 29 தேதிகளில் சளி பரிசோதனை செய்யப்பட்டது.  

அதன் முடிவில் ஆரணி வட்டத்தில் முள்ளிப்பட்டு கிராமத்தில் அம்மா, மகன், ஆரணி பாளையத்தில் கணவன், மனைவி, மகள், அம்பேத்கர் நகரில் அம்மா, மகன், வேப்பம்பட்டு கிராமத்தில் அப்பா, மகன், மகள் எனவும், ஆரணி பாளையம், சேவூர், அம்பேத்கர் நகர், மெழுகாம்பூண்டி, நடுகுப்பம், புனலபாடி, மோகன பாளையம், கஸ்தாம்பாடி, ஆதனூர், விளை, காந்தி நகர், கொசப்பாளையம், அடையபுலம், கண்ணமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் 54 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.  

செய்யாறு திருவோத்தூர் கிழக்கு மாடவீதியில் ஒரே குடும்பத்தில் கணவன், மனைவி, மகளுக்கும், பழனிவேல் தெருவில் அம்மா, மகன், மகளுக்கும், நாவல்பாக்கம் கிராமத்தில் 36 வயது இளைஞர், செய்யாறு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், சுமங்கலி கிராமத்தில் 23 வயது ஆண், நெடுங்கல் கிராமத்தில் 55 வயது ஆண், எச்சூர் கிராமத்தில் 37 வயது பெண், விண்ணவாடி கிராமத்தில் 60 வயது முதியவர், 45 வயது பெண், தேத்துறை கிராமத்தில் 29 வயது பெண், பில்லாந்தாங்கல், சட்டுவந்தாங்கல், செங்கம்பூண்டி, இருமரம், வாக்கடை, மடிப்பாக்கம், சுண்டிவாக்கம் ஆகிய கிராமங்களில் தலா ஒருவர் என 22 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.  

வந்தவாசி வட்டத்தில் பெரணமல்லூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் சப் இன்ஸ்பெக்டரின் மனைவி, வந்தவாசி இலட்சுமி நகரில் சகோதரர்கள் இருவருக்கும், தேசூரில் தந்தை மகனுக்கும், பொன்னூரில் தம்பதியர் மற்றும் மற்றொரு குடும்பத்தில் கணவன், மனைவி இரு மகள்களுக்கும், மழையூர், மீசநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் 18 பேருக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 101 பேரும் செய்யாறு, ஆரணி, திருவண்ணாமலை ஆகிய அரசு மருத்துவமனைகளிலும், செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரி சிறப்பு கரோனா சிகிச்சை மையம் மற்றும் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டு உள்ளனர். கரோனா தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரத் துறையினர் முழு வீச்சில் சுகாதாரப்பணிகள் மேற்கொண்டு உள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com