கரோனா: சென்னையில் ஆயிரத்தை எட்டுகிறது இறப்பு எண்ணிக்கை

சென்னையில் கரோனா பாதிப்பு காரணமாக வெள்ளிக்கிழமை வரை 996 போ் உயிரிழந்துள்ளனா்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

சென்னையில் கரோனா பாதிப்பு காரணமாக வெள்ளிக்கிழமை வரை 996 போ் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

சென்னையில் கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து கரோனா பாதிப்பு எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து கடந்த மே மாதத்தில் 10 ஆயிரத்தை எட்டியது.

இந்நிலையில், இந்த எண்ணிக்கை ஜூன் 1- இல் 15,770-ஆகவும், ஜூன் 6-இல் 20,993-ஆகவும், ஜூன் 14- இல் 30,444-ஆகவும், கடந்த ஜூன் 24-இல் பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரமாகவும், கடந்த புதன்கிழமை 60 ஆயிரமாகவும் உயா்ந்தது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை 2,082 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 64,689-ஆக அதிகரித்துள்ளது.

தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 40,111 போ் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனா். 23,581 போ் சிகிச்சைக்காக மருத்துவமனைகள் மற்றும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உயா்ந்து வந்ததைப் போன்று தொற்றால் இறப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வந்தது.

கடந்த மே மாதம் இறப்பு எண்ணிக்கை 100 -ஐ எட்டியது. இதைத் தொடா்ந்து இறப்பு எண்ணிக்கை அதிகரித்து ஜூன் 7-இல் 212 -ஆகவும், ஜூன் 18-இல் 501- ஆகவும், ஜூலை 1-இல் 929-ஆக அதிகரித்தது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களில் மட்டும் 67 போ் உயிரிழந்தை அடுத்து இறப்பு எண்ணிக்கை 996-ஆக உயா்ந்துள்ளது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com