கரோனா பனிச் சுமையிலும், மனிதநேயப் பணியில் ஈடுப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் கௌரவிப்பு

சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயில் பகுதியில் கழிவறையில் வயதான பெண்மணி கால் இடறி பீங்கானில் சிக்கி தவித்தார். இதனையறிந்த தூய்மைப் பணியாளர்கள் அவரை மீட்டனர்.
தூய்மைப்பணியாளர்களை கௌரவித்த பேரூராட்சி செயல்அலுவலர் கு.குகன்.
தூய்மைப்பணியாளர்களை கௌரவித்த பேரூராட்சி செயல்அலுவலர் கு.குகன்.


சீர்காழி: சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயில் பகுதியில் கழிவறையில் வயதான பெண்மணி கால் இடறி பீங்கானில் சிக்கி தவித்தார். இதனையறிந்த தூய்மைப் பணியாளர்கள் அவரை மீட்டனர்.

வைத்தீஸ்வரன் கோயில் தெற்கு வீதியில் வசிக்கும் வயதான பெண்மணி இருதினங்களுக்கு முன்னர் கழிவறையில் தவறி வழுக்கி விழுந்த போது ஒரு கால் மட்டும் பீங்கானுக்குள் மாட்டிக்கொண்டு எடுக்க முடியாமல் தவித்தார். சத்தம் கேட்டு ஓடிச்சென்ற குடும்ப உறுப்பினர்களும் எவ்வளவோ போராடியும் காலை விடுவிக்க முடியவில்லை. இதனால் அந்த பெண்மணி வலியாலும், பயத்தாலும் ஜூரம் வந்து மயங்கினார்.

அப்போது அத்தெருவில் பணியாற்றிக்கொண்டிருந்த தூய்மைப்பணியாளர்கள், பீங்கானை உடைத்து பெண்மணியின் காலை விடுவித்து மீட்டனர். 


இந்த அவசர உதவி செய்து பெண்மணியை மீட்ட தூய்மைப்பணியாளர்கள் ந. கண்ணையன், ந. செல்வம் , சீ. தினேஷ் ஆகியோருக்கு பேரூராட்சி செயல் அலுவலர் கு. குகன் சனிக்கிழமை பரிசு அளித்து பாராட்டினார். சுதந்திர தினவிழாவில் பதக்கம் அளித்து கௌரவிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com