திருமலையில் பக்தர்களை நுண்கிருமிகளிடமிருந்து பாதுகாக்க ட்ரை ஓசோன் ஸ்ப்ரே சிஸ்டம் 

திருமலைக்கு வரும் பக்தர்களை நுண்கிருமிகளிடமிருந்து பாதுகாக்க ஏழுமலையான் கோயிலில் ட்ரை ஓசோன் ஸ்ப்ரே சிஸ்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலையில் பக்தர்களை நுண்கிருமிகளிடமிருந்து பாதுகாக்க ட்ரை ஓசோன் ஸ்ப்ரே சிஸ்டம் 

திருப்பதி: திருமலைக்கு வரும் பக்தர்களை நுண்கிருமிகளிடமிருந்து பாதுகாக்க ஏழுமலையான் கோயிலில் ட்ரை ஓசோன் ஸ்ப்ரே சிஸ்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்படுவதை தடுக்க தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தேவஸ்தான ஊழியர்கள் 44 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களும் எவ்வித சிரமமும் இல்லாமல் பணிபுரிய தேவையான மாறுதல்களை செய்து வருகிறது. 

அதில் ஒருபாகமாக திருமலை ஏழுமலையான் கோயில், பயோமெட்ரிக் தரிசன வரிசைகள், அர்ச்சகர்கள், வேதபண்டிதர்கள் நுழையும் வாயில் உள்ளிட்ட இடங்களில் ட்ரை ஓசோன் ஸ்ப்ரே சிஸ்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை காலை இந்த சிஸ்டம் தொடங்கப்பட்டது. பக்தர்கள், ஊழியர்கள் மீது ஓசோன் புகை தெளிக்கப்படும் போது அதில் உள்ள ஹைராக்சி ப்ரீ ராடிகல் அயான் தொற்று ஏற்படுத்தும் சூட்சும நுண்கிருமிகள் அழிக்கப்படுகிறது. அதன்மூலம் பக்தர்கள், ஊழியர்கள், அதிகாரிகள், அர்ச்சகர்கள் உள்ளிட்டோருக்கு ஆரோக்கிய குறைபாடு ஏற்படுவது தடுக்கப்படுகிறது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com