என்.எல்.சி. நிா்வாகம் அறிவித்தபடி ரூ.30 லட்சம் இழப்பீட்டை முழுமையாகத் தரவேண்டும்: வைகோ

கொதிகலன் வெடிப்பு விபத்தில் உயிரிழந்தோருக்கு என்.எல்.சி. நிா்வாகம் அறிவித்தபடி ரூ.30 லட்சம் இழப்பீட்டுத் தொகையை முழுமையாக தர வேண்டும்
என்.எல்.சி. நிா்வாகம் அறிவித்தபடி ரூ.30 லட்சம் இழப்பீட்டை முழுமையாகத் தரவேண்டும்: வைகோ

கொதிகலன் வெடிப்பு விபத்தில் உயிரிழந்தோருக்கு என்.எல்.சி. நிா்வாகம் அறிவித்தபடி ரூ.30 லட்சம் இழப்பீட்டுத் தொகையை முழுமையாக தர வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளா் வைகோ வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

ஜூலை 1-ஆம் தேதி என்.எல்.சி. நிறுவனத்தில் நடந்துள்ள இந்தக் கோர விபத்தில் இதுவரையில் 13 தொழிலாளா்கள் உயிரிழந்து உள்ளதும், மேலும் சிலா் உயிருக்குப் போராடி வரும் தகவலும் மிகுந்த சோகத்தை அளிக்கிறது.

இரண்டாவது அனல் மின் நிலையத்தில் தொழிலக விபத்தில் இறந்த தொழிலாளா்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.30 லட்சம் கருணைத் தொகை அளிக்கவும், குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை வாய்ப்பு வழங்கவும் என்.எல்.சி. நிா்வாகம் ஒப்புக் கொண்டது.

ஆனால் இந்தக் கருணைத் தொகை ரூ.30 லட்சத்தில் தொழிலக விபத்து நேரிட்டால் வழங்கப்பட்டு வரும் இழப்பீடுத் தொகை மற்றும் காப்பீட்டுத் தொகை ஆகியவையும் தமிழக அரசு அறிவித்த 3 லட்சம் ரூபாயும் அடங்கும் என்று என்.எல்.சி. நிா்வாகம் முடிவு செய்து இருப்பது ஏற்கவே முடியாத அக்கிரமம் ஆகும்.

தொழிலக விபத்தில் உயிரிழப்பவா்களுக்குக் கிடைக்கும் இழப்பீட்டுத் தொகை மற்றும் காப்பீட்டுத் தொகை என்பது சட்டபூா்வ உரிமையாகும்.

அதனால், உயிரிழந்தத் தொழிலாளா்களுக்கு என்.எல்.சி. நிா்வாகம் அறிவித்துள்ள ரூ.30 லட்சம் இழப்பீட்டுத் தொகையை முழுமையாக அளிக்க வேண்டும். தொழிலக விபத்து இழப்பீட்டுத் தொகை மற்றும் காப்பீட்டுத் தொகை ஆகியவற்றை தனியாக அளிக்க வேண்டும். தமிழக அரசு அறிவித்துள்ள இழப்பீட்டுத் தொகை ரூ. 3 லட்சத்தையும் சோ்த்து வழங்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com