கரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக சித்த மருத்துவர்கள் கூறினால் சந்தேகப்படுவது ஏன்? உயர் நீதிமன்றம்

கரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக சித்த மருத்துவர்கள் கூறினால் சந்தேகப்படுவது ஏன் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக சித்த மருத்துவர்கள் கூறினால் சந்தேகப்படுவது ஏன்? உயர் நீதிமன்றம்
கரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக சித்த மருத்துவர்கள் கூறினால் சந்தேகப்படுவது ஏன்? உயர் நீதிமன்றம்


சென்னை: கரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக சித்த மருத்துவர்கள் கூறினால் சந்தேகப்படுவது ஏன் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தின் தந்தை தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம், மத்திய ஆயுஷ் அமைச்சரகத்தை எதிர் மனுதாரராக சேர்த்துக் கொண்டுள்ளது.

மேலும் வழக்கில் நீதிபதிகள் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளனர்.

அதாவது, 
கரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக இதுவரை எத்தனை சித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்?

ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, சித்த மருத்துவ வளர்ச்சிக்கு இதுவரை எவ்வளவு செலவிடப்பட்டுள்ளது?
சித்த மருத்துவர்கள் கண்டுபிடித்த எத்தனை மருந்துகள் ஆயுஷ் அமைச்சகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது?

நாட்டில் எத்தனை சித்த மருத்துவ ஆராய்ச்சி மருத்துவமனைகள் உள்ளன. அவற்றில் போதுமான நிபுணர்கள் உள்ளனரா? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.

மேலும், நமது மருத்துவர்களுக்கு கட்டமைப்பு, பண உதவி செய்து அவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com