'செப்டம்பருக்குள் செமஸ்டர் தேர்வை நடத்த வேண்டும் என்ற உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்'

'செப்டம்பருக்குள் செமஸ்டர் தேர்வை நடத்த வேண்டும் என்ற உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்'

செப்டம்பருக்குள் செமஸ்டர் தேர்வை நடத்த வேண்டும் என்ற உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி மத்திய மனிதவள மேம்பாட்டுதுறை அமைச்சர் ரமேஷ் போக்ரியாலுக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

செப்டம்பருக்குள் செமஸ்டர் தேர்வை நடத்த வேண்டும் என்ற உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி மத்திய மனிதவள மேம்பாட்டுதுறை அமைச்சர் ரமேஷ் போக்ரியாலுக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

கரோனா நோய்த்​தொற்று பர​வலை தடுக்க, கடந்த மார்ச் மாதம் 25-ஆம் தேதி முதல் நாடு தழு​விய பொது முடக்​கம் அமல்​ப​டுத்​தப்​பட்​ட​தால் பல்​க​லைக்​க​ழ​கங்​கள் மற்​றும் கல்​லூ​ரி​க​ளில் நடை​பெ​ற​வி​ருந்த தேர்​வு​கள் ஒத்​தி​வைக்​கப்​பட்​டன. பல்​க​லைக்​க​ழக இறு​தி​யாண்டு தேர்​வு​கள் இம்​மா​தம் நடை​பெ​றும் என்று அறி​விக்​கப்​பட்​டது.  இந்​நி​லை​யில் கரோனா நோய்த்​தொற்​றின் தீவி​ரம் தணி​யா​த​தால் அந்த தேர்​வு​கள் தொடர்​பான தனது வழி​காட்​டு​தல்​களை மறு ஆய்வு செய்​யு​மாறு, கடந்த மாதம் 25-ஆம் தேதி பல்​க​லைக்​க​ழக மானி​யக் குழு​வி​டம் மத்​திய மனி​த​வள மேம்​பாட்டு துறை அமைச்​ச​கர் ரமேஷ் போக்​ரி​யால் கேட்டுக்​கொண்​டார். 

அதன் அடிப்​ப​டை​யில் பல்​க​லைக்​க​ழக மானி​யக்​கு​ழு​வின் திருத்​தி​ய​மைக்​கப்​பட்ட வழி​காட்​டு​தல்​களை அவர் திங்​கள்​கி​ழமை வெளி​யிட்​டார். அதில், "பல்​க​லைக்​க​ழ​கங்​க​ளில் சாத்​தி​யக்​கூ​று​களை பொருத்து வழக்​க​மான நடை​மு​றை​யிலோ, இணை​ய​வ​ழி​யிலோ, அல்​லது இரண்​டை​யும் பின்​பற்​றியோ செப்​டம்​பர் மாத இறு​திக்​குள் இறு​தி​யாண்டு தேர்​வு​கள் நடத்​தப்​ப​ட​வேண்​டும். இந்​தத் தேர்​வு​க​ளில் பங்​கேற்க முடி​யாத மாண​வர்​க​ளுக்கு சிறப்பு தேர்​வு​கள் நடத்​தப்​ப​ட​வேண்​டும்' என்று தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது. இதன் மூல​மாக பல்​க​லைக்​க​ழ​கங்​க​ளில் இறு​தி​யாண்டு தேர்​வு​கள் நடை​பெறுவது உறு​தி​யா​கி​யுள்​ளது. 

இந்த நிலையில் செப்டம்பருக்குள் செமஸ்டர் தேர்வை நடத்த வேண்டும் என்ற உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி மத்திய மனிதவள மேம்பாட்டுதுறை அமைச்சர் ரமேஷ் போக்ரியாலுக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். அதில், கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்த முடியாத சூழல் உள்ளது. எனவே, பல்கலை. கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வுக்கான உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மேலும் செமஸ்டர் தேர்வுகள் குறித்து முடிவெடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com