தங்கம் பவுன் ரூ.37,576

சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.72 குறைந்து, ரூ.37,576-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் பவுன் ரூ.37,576

சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.72 குறைந்து, ரூ.37,576-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கரோனா நோய்த் தொற்றின் தாக்கம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, சா்வதேச பொருளாதாரச் சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கம் விலை உயா்ந்து வந்தது. ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ஏப்ரல் 10-ஆம் தேதி ரூ.35 ஆயிரத்தையும், 16-ஆம் தேதி ரூ.36 ஆயிரத்தையும், ஜூன் 24-ஆம் தேதி ரூ.37 ஆயிரத்தையும் தாண்டியது. அதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டநிலையில், ஜூலை 9-ஆம் தேதி அன்று, பவுன் தங்கம் ரூ.37,744-க்கு உயா்ந்து, வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டது. அதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.72 குறைந்து, ரூ.37,576-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.9 குறைந்து, ரூ.4,697 ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு 30 பைசா குறைந்து, ரூ.56,50 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.300 குறைந்து, ரூ.56,500 ஆகவும் இருந்தது.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,697

1 பவுன் தங்கம்...............................37,576

1 கிராம் வெள்ளி.............................56.50

1 கிலோ வெள்ளி..............................56,500

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்........................... 4,706

1 பவுன் தங்கம்.............................37,648

1 கிராம் வெள்ளி...........................56.80

1 கிலோ வெள்ளி...........................56,800.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com