திருவள்ளூர் பவானியம்மன் கோயிலுக்கு வந்த பக்தர்கள் திருப்பி அனுப்பிவைப்பு

திருவள்ளூர் மாவட்டம் பவானியம்மன் கோயிலுக்கு நடைபாதையாக வந்த பக்தர்களை காவல்துறையினர் தடுத்துநிறுத்தி திருப்பிஅனுப்பிவைத்தனர். 
திருவள்ளூர் பவானியம்மன் கோயிலுக்கு வந்த பக்தர்கள் திருப்பி அனுப்பிவைப்பு

திருவள்ளூர் மாவட்டம் பவானியம்மன் கோயிலுக்கு நடைபாதையாக வந்த பக்தர்களை காவல்துறையினர் தடுத்துநிறுத்தி திருப்பிஅனுப்பிவைத்தனர். 

எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் பவானி அம்மன் திருக்கோவில் மிகவும் புகழ்பெற்ற கோவிலாகும். இக்கோவிலில் ஆடி மாதம் திருவிழா 15 வார காலமாக மிக விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

தற்போது நாடு முழுவதும் வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தும் வருகிறது. இந்நிலையில் தற்போது ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை என்பதால் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் மற்றும் உள்ளூர் பக்தர்கள் இன்று அதிகாலை முதல் பெண்கள் புனித நீராடி கையில் வேப்பிலை ஏந்தி கோயிலுக்கு நடப்பதாக வந்து கொண்டிருக்கின்றார்.

அவர்களை கட்டுப்படுத்தும் வகையிலும் நோய்த்தொற்று அதிகரிக்காமல் இருக்க பெரியபாளையம் அடுத்த வடமதுரை கூட்டுச் சாலையில் ஊத்துக்கோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் சந்திரதாசன் தலைமையில் கொண்ட பெரியபாளையம் ஆய்வாளர் மகேஸ்வரி துணை ஆய்வாளர் கிருஷ்ணராஜ் மற்றும் காவல்துறையினர் நடைபாதையாக வரும் பக்தர்களை அறிவுரைகளை வழங்கி திருப்பி அனுப்பி வைத்தனர்.

மேலும் இதனையடுத்து ஆட்டோக்கள் மூலம் வந்த பக்தர்கள் இறக்கிவிடப்பட்டு உத்தரவுகளை மீறிய வாகனங்கள் மீது வழக்குப் பதிந்து வாகனங்களைப் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com