பணமதிப்பிழப்பு அறியாமல் வைத்திருந்த மாற்றுதிறனாளி மூதாட்டிக்கு சீர்காழி ரோட்டரி சங்கம் நிதிஉதவி

கடந்த 2016 ஆம் ஆண்டில் ரூ.500,1000 பணம் மதிப்பிழப்பு செய்யப்பட்ட குறித்து அறியாமல் சேமித்து வைத்திருந்த மாற்றுதிறனாளி மூதாட்டிக்கு சீர்காழி ரோட்டரி சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை நிவாரண உதவிகள் வழங்கப்
பணமதிப்பிழப்பு குறித்து அறியாத மாற்றுதிறனாளி மூதாட்டிக்கு மதிப்பிழந்த மொத்ததொகை ரூ37ஆயிரம் நிதிஉதவியை வழங்கிய ரோட்டரிசங்கத்தினர்.
பணமதிப்பிழப்பு குறித்து அறியாத மாற்றுதிறனாளி மூதாட்டிக்கு மதிப்பிழந்த மொத்ததொகை ரூ37ஆயிரம் நிதிஉதவியை வழங்கிய ரோட்டரிசங்கத்தினர்.

சீர்காழி: கடந்த 2016 ஆம் ஆண்டில் ரூ.500,1000 பணம் மதிப்பிழப்பு செய்யப்பட்ட குறித்து அறியாமல் சேமித்து வைத்திருந்த மாற்றுதிறனாளி மூதாட்டிக்கு சீர்காழி ரோட்டரி சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

நாகை மாவட்டம் சீர்காழி வட்டம் மாதிரவேளூர் ஊராட்சி பட்டியமேடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜதுரை(58) கூலித்தொழிலாளி. இவரது மனைவி உஷா(52), மகள் விமலா(17). உஷாவும், விமலாவும் வாய்பேச முடியாத மற்றும் காது கேட்காத மாற்றுதிறனாளிகள் ஆவர். 

இந்த நிலையில் உஷா, தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்டத்தில் வேலைக்கு சென்று வந்த கூலியை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தனது மகள் திருமணத்திற்காக சேர்த்துவைத்துவந்துள்ளார். இவ்வாறு ரூ.1000 நோட்டுகள் 10, ரூ.500 நோட்டுகள் 51 என மொத்தம் ரூ.35,500 சேமித்து வைத்து அதனை ஒரு நெகிழிபையில் பத்திரமாக சுருட்டி, அதனுடன் அரைபவுன் தங்கம் தோடு ஆகியவற்றையும் வைத்து தனது கணவருக்கு தெரியாமல் தனது வீட்டின் பின்புறம் பள்ளம் வெட்டி புதைத்து வைத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி மத்திய அரசு பழைய ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. இந்த செய்தி குறித்து காது கேட்காத உஷாவும், விமலாவும் அறியவில்லை. 

இந்நிலையில் ராஜதுரை தனது கூரை வீட்டை தமிழக அரசின் நிதியுதவியுடன் கட்டப்படும் பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தில் அனுமதி பெற்று வீடு கட்டும் பணியை தொடங்கியுள்ளார். வீடு கட்டும் பணிக்காக தொழிலாளர்கள் ராஜதுரை வீட்டின் பின்புறம் பள்ளம் வெட்டியபோது அங்கு நெகிழி பை ஒன்று சிக்கியது. அதனை வெளியே எடுத்து பார்த்தபோது அந்த பையில் மத்திய அரசு செல்லாது என அறிவித்த பழைய ரூ.1000, ரூ.500 நோட்டுகள் அதிகளவு இருந்தன. அதனை எடுத்து பார்த்தபோது ரூ.35.500 இருந்தது கண்டு தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்து உஷாவிடம் தெரிவித்தனர். இதனால் மனவேதனையில் உஷா குடும்பத்தினர் இருந்து வந்தனர்.

இந்நிலையில் இது குறித்து தினமணி இணையதளத்தில் செய்தி வெளியானது. இதனையறிந்த சீர்காழி ரோட்டரி சங்கத்தினர் பட்டியமேடு கிராமத்திலிருந்து ராஜதுரை அவரது மனைவி உஷா,மகள் விமலா ஆகியோரை சீர்காழி ரோட்டரி சங்க கட்டிடத்திற்கு அழைத்து வந்து மதிப்பிழந்த மொத்ததொகை ரூ.37ஆயிரம் நிதியுதவியை ரோட்டரி தலைவர் திருநாவுக்கரசு தலைமையில் வழங்கினர். மேலும் கிராம முக்கியஸ்தர்கள் மூலம் மதிப்பிழந்த பழைய ரூபாய்நோட்டுக்களை அரசு கருவூலத்தில் செலுத்திட அறிவுறுத்தினர்.

இதில் ரோட்டரி செயலாளர் சண்முகம், பொருளாளர் அய்யுப் அன்சாரி ,முன்னாள் தலைவர்கள் சுடர்.கல்யாணசுந்தரம், பழனியப்பன், கண்ணன், வழக்குரைஞர் சுந்தரய்யா மற்றும் ஊர்முக்கியஸ்தர்கள் பாலதண்டாயுதபாணி, ராஜதுரை,அருண் ஆகியோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com