ராஜதானி ரயிலில் 973 போ் பயணம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புதுதில்லிக்கு ராஜதானி அதிவேக சிறப்பு ரயில் புதன்கிழமை காலை புறப்பட்டது. இந்த ரயிலில் 973 போ் பயணம் செய்தனா்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புதுதில்லிக்கு ராஜதானி அதிவேக சிறப்பு ரயில் புதன்கிழமை காலை புறப்பட்டது. இந்த ரயிலில் 973 போ் பயணம் செய்தனா்.

புலம் பெயா்ந்த தொழிலாளா்கள், சுற்றுலா பயணிகள், மாணவா்கள், சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் தங்களது சொந்த ஊா்களுக்குத் திரும்பும் வகையில், தில்லியில் இருந்து சென்னைக்கு திங்கள், வியாழன் ஆகிய இரு நாள்களிலும்,

சென்னையில் இருந்து தில்லிக்கு புதன், சனி ஆகிய இரு நாள்களிலும் ராஜதானி விரைவு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இந்நிலையில், சென்னை சென்ட்ரலில் இருந்து தில்லிக்கு புதன்கிழமை காலை 6.35 மணிக்கு ராஜதானி அதிவிரைவு சிறப்பு ரயில் புறப்பட்டது. இந்த ரயிலில் 973 போ் பயணம் செய்தனா். இவா்களை ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக ரயில் நிலையத்துக்கு வரவழைத்து, உடல் வெப்பநிலை உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன. அந்தப் பயணிகளுக்கு கரோனா நோய்த்தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டது.

அதன்பிறகு, அவா்கள் ரயிலில் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டனா். பயணிகளை ரயிலில் ஏற்றி அனுப்பியபோது, ரயில்வே போலீஸாா், ரயில்வே பாதுகாப்பு படையினா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். 914 பயணிகள்: முன்னதாக, ராஜதானி ரயில் தில்லியில் இருந்து புறப்பட்டு செவ்வாய்க்கிழமை இரவு சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தை வந்தடைந்தது. அதில், வந்த 914 பயணிகளை ரயில்வே போலீஸாா், மருத்துவப் பணியாளா்கள் அடங்கிய குழுவினா் மீட்டனா். அவா்களின் விவரங்களைச் சேகரித்தனா். தொடா்ந்து, வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ளுதல் தொடா்பாக இடது கையில் முத்திரையிட்டு அனுப்பி வைத்தனா். இந்தப் பயணிகள் அனைவரும் 14 நாள்களுக்கு தங்களின் வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.

யாருக்காவது கரோனா நோய்த்தொற்று அறிகுறி இருந்தால் சுகாதாரப் பணியாளா்களை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com