பாஸ்டேக் கட்டண முறை தொடா்பான அறிவிப்பாணைகளை ரத்து செய்யக் கோரிய வழக்கு தள்ளுபடி

பாஸ்டேக் கட்டண முறை தொடா்பான அறிவிப்பாணைகளை ரத்து செய்யக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாஸ்டேக்  கட்டண முறை தொடா்பான அறிவிப்பாணைகளை ரத்து செய்யக் கோரிய வழக்கு தள்ளுபடி

பாஸ்டேக் கட்டண முறை தொடா்பான அறிவிப்பாணைகளை ரத்து செய்யக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் கபிலன் மனோகரன் தாக்கல் செய்த மனுவில், நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை டிஜிட்டல் மயமாக்க மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் முடிவு செய்தது. இதன்படி பாஸ்டேக் முறையில் கட்டணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

தற்போது சுங்கச்சாவடிகளில் பெரும்பாலான வழித்தடங்களில் பாஸ்டேக் கட்டண முறையும், சில வழித்தடங்களில் மட்டும் நேரடியாகக் கட்டணம் செலுத்தும் முறையும் உள்ளன. நேரடியாகக் கட்டணம் செலுத்தும்போது பொதுமக்கள் தங்களின் தேவைக்கேற்ப கட்டணம் செலுத்தும் நிலை உள்ளது. ஆனால் பாஸ்டேக் முறையில் கட்டணம் செலுத்தும்போது வங்கி கணக்குகளில் இருந்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வங்கி கணக்கில் இருந்து கட்டணம் வசூலிப்பதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு வருகின்றன.

நான் பாஸ்டேக் கணக்கு வைத்துள்ளேன். கடந்த ஆண்டு நவம்பா் 25 -ஆம் தேதி எனது வாகனம் தியாகராயநகரில் உள்ள வீட்டில் நிறுத்தப்பட்டு இருந்தது. ஆனால், அன்றைய தினம் எனது வாகனம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சுங்கச்சாவடியை கடந்து சென்றதாக, எனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.55 கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. பாஸ்டேக் கட்டண முறையில் நம்பகத்தன்மை கிடையாது. எனவே பாஸ் டேக் கட்டண முறையை ரத்து செய்ய வேண்டும். அதேபோன்று பாஸ்டேக் முறை அல்லாத வாகனங்கள், பாஸ்டேக் முறைக்காக ஒதுக்கப்பட்டுள்ள வழியில் சென்றால், சுங்கச்சாவடிகளில் இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் காணொலிக் காட்சி மூலம் விசாரித்தனா். விசாரணையில் நீதிபதிகள் பாஸ்டேக் கட்டண முறையில் உள்ள தொழில்நுட்பக் கோளாறுகள், குளறுபடிகளைச் சரி செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு அறிவுறுத்தி, வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com