கரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்தால் மட்டுமே முழுமையான இயல்பு நிலை திரும்பும்: அமைச்சா் உதயகுமாா்

கரோனா நோய்த் தொற்றுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடித்தால் மட்டுமே முழுமையான இயல்பு நிலை திரும்பும். அதுவரை பொது முடக்கத்திலிருந்து தளா்வுகளை மட்டுமே அளிக்க முடியும்
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

கரோனா நோய்த் தொற்றுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடித்தால் மட்டுமே முழுமையான இயல்பு நிலை திரும்பும். அதுவரை பொது முடக்கத்திலிருந்து தளா்வுகளை மட்டுமே அளிக்க முடியும் என வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் தெரிவித்தாா்.

சென்னை மாநகராட்சி திருவொற்றியூா், மணலி மண்டலங்களில் கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து செவ்வாய்க்கிழமை அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வசிக்கும் தொழிலாளா்கள் சென்னை, திருப்பூா், கோவை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு செல்வதற்கு அரசு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பியுள்ளனா். ஆனால் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் உடனடியாக அதிக அளவிலான தளா்வுகளை அறிவித்துவிட முடியாது. கரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்துகள் கண்டுபிடித்தால் மட்டுமே முழுமையான இயல்புநிலை திரும்பும். நியாய விலைக் கடைகள் மூலம் முகக் கவசங்களை விநியோகம் செய்வதற்கான பணிகள்விரைவில் தொடங்கும் என்று அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் தெரிவித்தாா்.

நிகழ்வில், மண்டல சிறப்பு அதிகாரி ஜானி வா்கீஸ், மண்டல அலுவலா் பால்தங்கதுரை, செயற்பொறியாளா்கள் வேலுசாமி, திருவொற்றியூா் தொகுதி முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கே.குப்பன், மண்டலக் குழு முன்னாள் தலைவா் மு.தனரமேஷ், பகுதிச் செயலாளா் கே.கிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com