தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத் திருவிழாவில் மக்கள் பங்கேற்க அனுமதியில்லை: மாவட்ட ஆட்சியர்

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத் திருவிழா மக்கள் பங்கேற்பின்றி கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத் திருவிழா மக்கள் பங்கேற்பின்றி கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடியில் பிரபல ஆன்மிகத் தலமான தூய பனிமய மாதா பேராலயத்தில் ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை திருவிழா நடைபெறும். இவ்விழாவிற்கு வெளி மாவட்டங்கள், மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் கலந்துகொள்வர். 

இந்நிலையில், இந்தாண்டு கரோனா பரவலினால் மக்கள் பங்கேற்பின்றி விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் இல்லங்களிலேயே வழிபாடு மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, 'தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத் திருவிழா வருகிற 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கும். ஆனால், மக்கள் யாரும் பங்கேற்க அனுமதி இல்லை. கொடியேற்ற விழா நிகழ்ச்சியில் பங்குத்தந்தைகள் 15 பேர் மட்டுமே பங்கேற்பார்கள்' என்று தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com