சங்ககிரி அருகே மதுபானக் கடைக்கு எதிராக பெண்கள் போராட்டம்

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூர் அருகே புதிதாக அமைக்கப்பட்ட  அரசு மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி பொதுமக்கள் மதுபானக் கடையை திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்
முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்
முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூரை அடுத்துள்ள அரசிராமணி மூலப்பாதை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட  அரசு மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி பொதுமக்கள் மதுபானக் கடையை திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்ககிரி வட்டம், தேவூரை அடுத்துள்ள அரசிராமணி மூலப்பாதை பகுதியில் கடந்த சில  ஆண்டுகளுக்கு முன்பு அரசு மதுபான கடை செயல்பட்டு வந்துது. இதனால் அப்பகுதியில்  மது அருந்துவோர் சாலையில் செல்வோரிடமும், குடிநீர் தொட்டியில் தண்ணீர் பிடிக்க வரும் பெண்களிடம் தகாத வார்த்தையில் பேசியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அப்பகுதியில் செயல்பட்டு வந்த மதுபானக் கடை பொதுமக்களின் கோரிக்கையை அடுத்து எடப்பாடியில் இருந்து கல்வடங்கம் செல்லும் சாலையில் உள்ள தண்ணிதாசனூர் பகுதியில் மாற்றம் செய்யப்பட்டு செயல்பட்டு வந்தது. இந்நிலையில் மீண்டும் மதுபானக்கடையை அரசிராமணி மூலப்பாதை பகுதியில் மாற்றம் செய்து விற்பனைக்கான பணிகளை கடை ஊழியர்கள் செய்துள்ளனர்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் மதுபானக் கடையைத் திறக்கக் கூடாது எனக் கோரி திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேவூர் காவல் துறையினர் பொதுமக்களிடத்தில்  பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com