திருச்சியில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

தமிழக அரசை கண்டித்து திருச்சி மாவட்ட தமிழக விவசயிகள் சங்கம் மற்றும் சமூக நீதி பேரவை சார்பில் விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

தமிழக அரசை கண்டித்து திருச்சி மாவட்ட தமிழக விவசயிகள் சங்கம் மற்றும் சமூக நீதி பேரவை சார்பில் விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போராட்டத்தில், தோகமலை - சோமரசம்பேட்டை நெடுஞ்சாலையை  நில உடைமைப் மேம்பாட்டு திட்டத்திற்கு முந்தைய புலப்படங்களை கொண்டு அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை தரம் உயர்த்த வேண்டும்,

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நில உடமை மேம்பாட்டு திட்டத்திற்கு முந்தைய புலப்படங்கள் கொண்டு அளவீடு செய்து விரிவாக்கம் செய்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும்,

கரூர் - திருச்சி மங்கம்மாள் சாலை 100 அடிகள் கொண்டதை நிலவுடமை மேம்பாட்டு திட்டத்திற்கு முந்தைய புலப்படங்களைக் கொண்டு அளவீடு செய்து சாலை அமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை  வலியுறுத்தி அல்லித்துறை உய்யக்கொண்டான் ஆற்றுப்பாலம் அருகில் விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் ஸ்ரீதர், காவல் துணைக் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com