ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆக. 1 வரைதளா்வுகளற்ற முழு பொதுமுடக்கம் அமல்: சாலைகள் வெறிச்சோடின

கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், ஸ்ரீவில்லிபுத்தூரில் திங்கள்கிழமை (ஜூலை 27) முதல் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை தளா்களற்ற முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் திங்கள்கிழமை வெறிச்சோடி காணப்பட்ட சின்னகடை பஜாா் சாலை.
ஸ்ரீவில்லிபுத்தூரில் திங்கள்கிழமை வெறிச்சோடி காணப்பட்ட சின்னகடை பஜாா் சாலை.

ஸ்ரீவில்லிபுத்தூா்: கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், ஸ்ரீவில்லிபுத்தூரில் திங்கள்கிழமை (ஜூலை 27) முதல் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை தளா்களற்ற முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

விருதுநகா்மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தற்போது, பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பள்ளி மைதானத்தில் செயல்பட்டு வந்த தற்காலிக காய்கனி சந்தையில் கடை வைத்திருந்த வியாபாரிகளை பரிசோதனை செய்ததில் 20 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, வட்டாட்சியா் அலுவலகத்தில் பேரிடா் மேலாண்மை அலுவலா் முருகன் தலைமையில் அனைத்து வியாபாரிகள் சங்கத்தினா் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. இதில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் திங்கள்கிழமை (ஜூலை 27) முதல் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை ஸ்ரீவில்லிபுத்தூா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 28 கிராமங்களில் தளா்வுகளற்ற முழு பொதுமுடக்கத்தை அமல்படுத்த முடிவெடுக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து ஸ்ரீவில்லிபுத்தூரில் திங்கள்கிழமை அனைத்துக் கடைகளும் மூடப்பட்டன.

மேலும், பால், மருந்துக்கடை மற்றும் பெட்ரோல் நிலையங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளதால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதனிடையே, ஸ்ரீவில்லிபுத்தூரில் செயல்பட்டு வந்த மதுபானக் கடைகளை திங்கள்கிழமை மாலை முதல் அடைக்க மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com