ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்தில் 96 ஆயிரம் வீடுகளுக்கு இணைப்பு நிறைவு

ஈரோடு, ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்தில் 96 ஆயிரம் வீடுகளுக்கு இணைப்பு நிறைவுபெற்றுள்ளதாக  குடிநீர் வடிகால் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 
ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்தில் 96 ஆயிரம் வீடுகளுக்கு இணைப்பு நிறைவு
ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்தில் 96 ஆயிரம் வீடுகளுக்கு இணைப்பு நிறைவு

ஈரோடு, ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்தில் 96 ஆயிரம் வீடுகளுக்கு இணைப்பு நிறைவுபெற்றுள்ளதாக குடிநீர் வடிகால் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

ஈரோடு மாநகராட்சியில் 60 வார்டுகளை சேர்ந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கும் வகையில், காவிரி ஆற்றில் 9 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு தினசரி 54 எம்எல்டி. குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. 

சாயக்கழிவு நீர் பிரச்னையால் மாநகராட்சிக்கு தூய்மையான குடிநீர் வழங்கும் வகையில் மத்திய அரசின் அம்ரூத் திட்டத்தின்கீழ் ரூ.484.45 கோடி மதிப்பீட்டில் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம்  செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், பவானி அருகே வரதநல்லூர் என்ற இடத்தில் காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. 

தண்ணீரை சுத்தப்படுத்த 2 ஏர்லேட்டர், அழுக்கு நீக்க தொட்டி, 38 பில்டர் பெட், 52 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளது. மேலும், தண்ணீரை பிரித்து வழங்கும் வகையில் சூரியம்பாளையத்தில் 42 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டியும், ஈரோடு வ.உ.சி. பூங்காவில் 1.14 கோடி லிட்டர் கொள்ளளவு கொண்ட ராட்சத குடிநீர் தொட்டியும் கட்டப்பட்டுள்ளது. 

இது தவிர, மாநராட்சியில் 21 மேல்நிலை தொட்டிகளும், 46 பழைய குடிநீர் தொட்டிகள் மூலம் ஒரு லட்சத்து 30ஆயிரம் வீடுகளுக்கு தண்ணீர் வழங்கும் வகையில் பணிகள் நடந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனினும் இருக்கின்ற பணியாளர்களை வைத்து பணிகளை முடக்கி விடும் பணியில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில்,

ஊராட்சிக்குட்டை குடிநீர் திட்டத்தில் இதுவரை 96 ஆயிரம் வீடுகளுக்கு இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற இணைப்புகள் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஊராட்சிக்கோட்டை விரிவாக்கத்தில் 25 ஆயிரம்  இணைப்பு  வழங்க  16 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

திட்டப்பணியில் மொத்தம் 650 கிலோ மீட்டர்  குழாய், இணைப்பு வழங்கும் பணியில் 570 கிலோ மீட்டர் குழாய் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 41 மேல்நிலை நீர் தேக்கத்தொட்டிகள் தயாராக உள்ளன.  49  புதிய தொட்டிகளில் 4 நிறைவு பெறாமல் உள்ளன. இரண்டு மாதத்தில் பணிகள் முடிக்கும் வகையில் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com