பக்ரீத் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து

பக்ரீத் திருநாளை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பக்ரீத் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து

பக்ரீத் திருநாளை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: எழுச்சியுடன் கொண்டாடப்படும் - தியாகப் பெருநாளான பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துக்களை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் இதயபூர்வமாகத் தெரிவித்துக் கொள்கிறேன். மிக முக்கியமான இந்தப் பண்டிகை தருணத்தில் - தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வில் நலமும் வளமும் பெற்று - நல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்திட வேண்டும் என்று வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி: உலகோர் அனைவரும் ஒரே தாய், தந்தை வழிவந்தவர்கள் என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய உண்மையை உணர்ந்து சகோதரத்துவம், சமாதானம், ஏகத்துவம் போன்றவற்றை பின்பற்றி மகிழ்ச்சியுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். தியாகத்திலே பிறந்து, தியாகம் செய்வதற்காகவே அர்ப்பணித்துக் கொண்டிருக்கிற, மத கோட்பாடுகளை போற்றிப் பாதுகாக்கிற வகையில் வாழ்ந்து வருகிற இஸ்லாமிய சகோதரர்களுக்கு நெஞ்சார்ந்த பக்ரீத் வாழ்த்துக்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: தியாகத்தைப் போற்றும் புனிதத் திருநாளான பக்ரித் திருநாளை உலகம் முழுவதும் கொண்டாடும் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பக்ரித் திருநாள் சொல்லும் பாடங்களை அனைத்து மக்களும் கடைபிடிக்க வேண்டும். சகோதரத்துவம், அன்பு, நல்லிணக்கம், ஈகை, மாற்றுத்திறனாளிகள் மீதான அக்கறை என்றும் நீடிக்க வேண்டும்; நல்ல மனம் கொண்ட மக்களுக்கு எல்லா நலமும், வளமும் கிடைக்க வேண்டும் என மீண்டும் வாழ்த்துகிறேன். 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் திருமாவளவன்: இஸ்லாமியப் பெருங்குடி மக்களின் பண்பாட்டுப் பெருவிழாக்களில் பக்ரீத் பண்டிகையும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்றாகும். அத்துடன், ஈகத்தையும் இறைநம்பிக்கையையும் இணைத்துக் கற்பிக்கும் கருத்தியலை அடிப்படையாகக் கொண்டிருக்கும் பெருவிழாவே இது.  இறைநம்பிக்கையிலிருந்தே மனிதகுலத்தின் மாண்புகள் செழுமைபெற முடியும் என்கிற கோட்பாட்டை மையமாகக் கொண்டதே இஸ்லாம்.

பாஜக தலைவர் எல்.முருகன்: அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கும் இனிய பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com