காஞ்சிபுரம் அருகே ரூ.42.26 கோடியில் புதிய தடுப்பணை: காணொலிக் காட்சி மூலம் முதல்வர் அடிக்கல் நாட்டினார்

காஞ்சிபுரத்தை அடுத்த உள்ளாவூரில் உள்ள பாலாற்றில் ரூ.42.26 கோடி மதிப்பில் புதிய தடுப்பணை கட்டுவதற்கான அடிக்கல்லை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக்காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே 5 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ள நிலையில், ஆறாவதாக ஒரு புதிய தடுப்பணை கட்டுவதற்காக ரூ.42.26 கோடி மதிப்பில் திட்டமிடப்பட்டது. இதனை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பழையசீவரம் அருகே உள்ளாவூரில் உள்ள பாலாற்றின் குறுக்கே 1000 மீ.தூரத்தினாலான புதிய தடுப்பணை கட்டுவதற்கான அடிக்கல்லை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக்காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

இப்புதிய தடுப்பணை பயன்பாட்டுக்கு வந்தால் பழையசீவரம், உள்ளாவூர், பாலூர், மேலச்சேரி, பழவேலி, பினாயூர், திருமுக்கூடல் ஆகிய கிராமங்கள் பாசன வசதி பெற்று விவசாயம் செழிக்கும். எனவே, இப்பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று புதிய தடுப்பணைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 

முதல்வர் காணொலி மூலம் அடிக்கல் நாட்டியதை தொடர்ந்து நிகழ்விடத்தில் முன்னாள் அமைச்சரும், காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக செயலாளருமான வி.சோமசுந்தரம், கழக அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத்.பா.கணேசன், முன்னாள் எம்.பி. காஞ்சி.பன்னீர் செல்வம் மற்றும் அதிமுக பிரமுகர்கள்,பொதுப்பணித்துறை நீர்வளப்பிரிவு அதிகாரிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com