அரசுப் பேருந்து மீது கல்வீசி கண்ணாடியை உடைத்த மனநலம் பாதித்த பெண்

புதுக்கோட்டையில் அரசுப் பேருந்து மீது கல்வீசி கண்ணாடியை உடைத்த மனநலம் பாதித்த பெண்ணால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 
அரசுப் பேருந்து மீது கல்வீசி கண்ணாடியை உடைத்த மனநலம் பாதித்த பெண்

புதுக்கோட்டையில் அரசுப் பேருந்து மீது கல்வீசி கண்ணாடியை உடைத்த மனநலம் பாதித்த பெண்ணால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஆலங்குடிக்கு அரசுப் பேருந்து ஒன்று திங்கள்கிழமை காலை புறப்பட்டது. பழைய பேருந்து நிலையம் அருகே வந்தபோது, மனநலம் பாதித்த பெண் கையில் பெரிய கற்களுடன் முன்னால் வந்து நின்றார். தடை இருக்கும்போது பேருந்தை எப்படி ஓட்டலாம் என்று கேட்டுக் கொண்டே கல்லை வீச, பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி உடைந்து நொறுங்கியது.

பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பயணிகள் நடுங்கி ஒதுங்கினர். யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. அந்தப் பெண் சாவகாசமாக ஓரமாக ஒதுங்கி சிறிது நேரம் நின்று விட்டு அங்கிருந்து போய்விட்டார். 

தகவலறிந்து வந்த அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலர்கள் மாற்றுப் பேருந்து ஏற்பாடு செய்து பயணிகளை அனுப்பி வைத்துவிட்டு, பேருந்தை பணிமனைக்கு எடுத்துச் சென்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com