நேசமணி சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதி மறுப்பு: ஹெச்.வசந்தகுமார் எம்.பி., காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

நேசமணி சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து நாகர்கோவிலில் மணிமண்டபம் முன்பு  ஹெச். வசந்தகுமார் எம்.பி. தலைமையில்
நேசமணி மணிமண்டபம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஹெச். வசந்தகுமார் எம்.பி. உள்ளிட்டோர்.
நேசமணி மணிமண்டபம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஹெச். வசந்தகுமார் எம்.பி. உள்ளிட்டோர்.


நாகர்கோவில்: நேசமணி சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து நாகர்கோவிலில் மணிமண்டபம் முன்பு  ஹெச். வசந்தகுமார் எம்.பி. தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் திங்கள்கிழமை போராட்டம் நடத்தினர்.

கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைய போராடியவர்களில் முக்கியமானவர் மார்ஷல் நேசமணி.   இவரது 52-ஆவது நினைவு தினம் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, நேசமணி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து மணிமண்டபம் பூட்டப்பட்டது.

இந்நிலையில், வசந்தகுமார் எம்.பி. தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் நேசமணி சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக மணிமண்டபத்துக்கு வந்தனர். மணிமண்டபம் பூட்டியிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதிகாரிகளின் நடவடிக்கைக்கு ஆட்சேபம் தெரிவித்து வசந்தகுமார், ஜே.ஜி. பிரின்ஸ் எம்.எல்.ஏ., மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் ராதாகிருஷ்ணன், நிர்வாகிகள்  மணி மண்டபத்தின் வாசலில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து வசந்தகுமார் கூறியது: நேசமணியின் நினைவு நாளில் அவரது சிலைக்கு ஆண்டுதோறும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டு, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மரியாதை செலுத்த அனுமதிக்கப்படவில்லை. இதனை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றார் அவர்.

சுமார் அரை மணி நேரப் போராட்டத்துக்கு பின்னர், காங்கிரஸ் கட்சியினர் அண்ணா பேருந்து நிலையம் அருகேயுள்ள நேசமணி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது,  பொது முடக்கம் அமலில் இருப்பதால் மணிமண்டபத்தை பூட்டிச் சென்றதாகத் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com