ரயில் டிக்கெட் ரத்து: நாளை முதல் முன்பதிவு மையங்களில் பணம் பெறலாம்

ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்து ரத்து செய்யப்பட்ட டிக்கெட்களுக்கு கட்டணத்தை திரும்பப் பெற நாளை முதல் முன்பதிவு மையங்கள் திறக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில் டிக்கெட் ரத்து: நாளை முதல் முன்பதிவு மையங்களில் பணம் பெறலாம்

ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்து ரத்து செய்யப்பட்ட டிக்கெட்களுக்கு கட்டணத்தை திரும்பப் பெற நாளை முதல் முன்பதிவு மையங்கள் திறக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பொதுமுடக்கம் காரணமாக ஜூன் 30 வரை ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், நேரடியாக சென்று டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் டிக்கெட் ரத்து கட்டணத்தை முன்பதிவு மையங்கள் திறக்கப்பட்ட பிறகு பெற்றுக்கொள்ளலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்திருந்தது. 

இந்நிலையில்,  ஜூன் 30 வரை ரத்தான ரயில் டிக்கெட்டுக்கான பணத்தை திரும்பப் பெற நாளை முதல் சென்னை கோட்டத்திற்குட்பட்ட  19 முன்பதிவு மையங்கள் திறக்கப்படவுள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது. 

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூட்டத்தைத் தவிர்க்க, பயணம் செய்ய திட்டமிடப்பட்ட தேதி அடிப்படையில் அட்டவணையை வெளியிட்டுள்ளது.

அதன்படி, மார்ச் 31 ஆம் தேதி வரை டிக்கெட் முன்பதிவு செய்தோர், ஜூன் 5 முதல் முன்பதிவு மையங்களுக்குச் சென்று தொகையை பெற்றுக்கொள்ளலாம். தொடர்ச்சியாக, 

01.04.2020 - 14.04.2020 டிக்கெட்களுக்கு --ஜூன் 12 முதல் 

15.04.2020 - 30.04.2020 -- ஜூன் 19 முதல் 

01.05.2020 - 15.05.2020 -- ஜூன் 26 முதல் 

16.05.2020 - 31.05.2020 -- ஜூலை 3 முதல் 

01.06.2020 - 30.06.2020 -- ஜூலை 10 ஆம் தேதி முதல் முன்பதிவு மையங்களுக்குச் சென்று டிக்கெட் கட்டணத்தைப் பெற்றுக்கொள்ளலாம். 

நாளை முதல் முன்பதிவு மையங்கள் திறக்கப்படும் ரயில் நிலையங்கள்: 

சென்னை சென்ட்ரல், எழும்பூர், சென்னை கடற்கரை, திருமழிசை, மாம்பலம், செயின்ட் தாமஸ் மவுண்ட், தாம்பரம், செங்கல்பட்டு, திண்டிவனம், பெரம்பூர், ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, வாலாஜா ரோடு, ஆம்பூர், குடியாத்தம், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com