ஊத்தங்கரை அருகே இடிந்து விழும் நிலையில் குடிநீர் தொட்டி

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே இடிந்து விழும் நிலையில் அபாயகரமான குடிநீர் தொட்டி இருப்பதால் அரசு நடவடிக்கை எடுக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
ஊத்தங்கரை அருகே இடிந்து விழும் நிலையில் குடிநீர் தொட்டி

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே இடிந்து விழும் நிலையில் அபாயகரமான குடிநீர் தொட்டி இருப்பதால் அரசு நடவடிக்கை எடுக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

ஊத்தங்கரை அடுத்த வீரணகுப்பம் ஊராட்சியில் வீரணக்குப்பம் கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக 30 ஆயிரம் லிட்டர் குடிநீர்த் தொட்டி இங்கு உள்ளது. இது கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் பழுதடைந்து இடிந்து விழும் அபாயகரமாக உள்ளது.

குடிநீர் தொட்டியின் மேற்கூரை இடிந்து உள்ளே விழுந்த காரணத்தால் மோட்டார் மூலம் தண்ணீர் ஏற்றுவதை நிறுத்தி உள்ளனர். மேலும் ஆங்காங்கு காரைகள் பெயர்ந்து கம்பிகள் தெரிந்த வண்ணம் உள்ளன. இதனால் இப்பகுதி மக்கள் குடிநீரின்றி அவதிப்பட்டு தினம்தோறும் ஆழ்துளை கை பம்பு மூலம் தண்ணீர் எடுத்துச் செல்கின்றன,

இது சம்பந்தமாக அப்பகுதியைச் சார்ந்த பூபதி கூறுகையில்:

இந்த குடிநீர் தொட்டி பழுதடைந்து 3 ஆண்டுகாலமாக உள்ளது. இதுவரை எந்த நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகம் எடுக்கவில்லை. மேலும் இதன் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் இணைப்பில் தண்ணீர் பிடிக்கச் சென்ற 2 பெண்கள் மீது காரை பெயர்ந்து விழுந்ததில் மண்டை உடைந்தது. இந்த குடிநீர் தொட்டி நம்பி 1000க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

ஆகையால் டேங்கை இடித்துவிட்டு புதியதாகக் குடிநீர்த் தொட்டி அமைத்து, இந்த பகுதி மக்களின் தாகத்தைத் தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்,

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com