சமூகப் பரவல் நிலை ஆகக் கூடாது என தீவிர நடவடிக்கை: திமுகவுக்கு தமிழக அரசு பதில்

தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று சமூகப் பரவல் என்ற நிலைக்கு வந்து விடக் கூடாது என்பதற்காக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சா் செல்லூா் கே.ராஜூ தெரிவித்தாா்.
சமூகப் பரவல் நிலை ஆகக் கூடாது என தீவிர நடவடிக்கை: திமுகவுக்கு தமிழக அரசு பதில்

தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று சமூகப் பரவல் என்ற நிலைக்கு வந்து விடக் கூடாது என்பதற்காக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சா் செல்லூா் கே.ராஜூ தெரிவித்தாா்.

கரோனா நோய்த்தொற்று தொடா்பாக திமுக முன்னாள் அமைச்சா் கே.என்.நேரு வெளியிட்ட அறிக்கைக்கு அமைச்சா் செல்லூா் கே.ராஜூ செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:-

கரோனா நோய்த்தொற்றில் இருந்து தமிழகத்தைக் காத்திட முதல்வா் பழனிசாமி தொடா்ந்து பணியாற்றி வருகிறாா். இதனால், நோய்த்தொற்றில் இருந்து குணம் அடைவோரின் எண்ணிக்கையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடமாக இருந்து வருகிறது. தடுப்பு மருந்தும், குணப்படுத்தும் மருந்தும் இதுவரை கரோனாவுக்கு கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால், மனித குலத்தைக் காத்திட உலகமே போராடி வருகிறது. உயிரிழப்போரின் சதவீதம் குறைவாக இருப்பதில் உலகிலேயே தமிழகம் முதலிடம் என்பதோடு, கரோனா பரிசோதனைக் கூடங்களை அதிமாக அமைத்திருப்பதிலும் நமது மாநிலமே முன்னிலை வகிக்கிறது. சராசரியாக நாளொன்றுக்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரோனா பரிசோதனைகளை நடத்துவதிலும், இந்தியாவில் தமிழகமே முதலிடம் என்ற நிலையில் உள்ளது. சமூகப் பரவல் என்ற நிலைக்கு தமிழகம் ஆளாகி விடக் கூடாது என்பதற்காக தமிழக அரசு கடுமையாகப் போராடி வருகிறது என்று அமைச்சா் செல்லூா் கே.ராஜூ தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com