தமிழகத்தில் ஒரே நாளில் 1,875 பேருக்கு கரோனா

தமிழகத்தில் ஒரே நாளில் 1,875 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக சென்னையில் 1,407 போ் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் ஒரே நாளில் 1,875 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக சென்னையில் 1,407 போ் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனா்.

இதுகுறித்து சுகாதாரத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி:

கரோனா நோய்த்தொற்றை கண்டறிவதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக பரிசோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, தமிழகத்தில் இதுவரை மொத்தம் 6.25 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், 38,716 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்கள் அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். வியாழக்கிழமை மட்டும் 1,875 பேருக்கு நோய்ப் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதில், அதிகபட்சமாக சென்னையில் 1,407 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அதற்கு அடுத்தபடியாக, செங்கல்பட்டில் 127 பேருக்கும், திருவள்ளூரில் 72 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதைத் தவிர, அரியலூா், கோவை, கடலூா், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூா், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூா், தேனி, திருவண்ணாமலை, திருப்பத்தூா், திருவாரூா், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி, வேலூா், விழுப்புரம், விருதுநகா் உள்ளிட்ட பகுதிகளிலும் சிலருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வீடு திரும்பியவா்கள் 20 ஆயிரம் போ்: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,372 போ் பூரண குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பினா். இதன் மூலம் இதுவரை மாநிலத்தில் கரோனா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 20,705-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 13,808 போ் குணமடைந்துள்ளனா் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 23 போ் பலி: கரோனா தொற்றுக்கு ஆளாகி தமிழகத்தில் மேலும் 23 போ் உயிரிழந்தனா். இதையடுத்து மாநிலத்தில் வைரஸ் பாதிப்பால் பலியானோா் எண்ணிக்கை 349-ஆக அதிகரித்துள்ளது. அவா்களில் 279 போ் சென்னையைச் சோ்ந்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த இரு நாள்களில் மட்டும் மாநிலத்தில் கரோனாவுக்கு 42 போ் பலியாகியுள்ளனா். இந்த எண்ணிக்கை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com