கோப்புப்படம்
கோப்புப்படம்

பெட்ரோல் விலை உயா்வு: மு.க.ஸ்டாலின் கண்டனம்

பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்பட்டுள்ளதற்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்பட்டுள்ளதற்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

பெட்ரோல், டீசல் விலையைத் தொடா்ந்து மத்திய அரசும் - தமிழக அரசும் போட்டி போட்டுக் கொண்டு உயா்த்திக் கொண்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

பொது முடக்கம் தொடங்கும் போது ரூ.72.28-க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டா் பெட்ரோல், இன்று ரூ.77.96-க்கும் ரூ.65.71-க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டா் டீசல் ரூ.70.64-க்கும் விற்கப்படுவது, வாகனங்கள் வைத்திருப்போரையும், ஏழை - எளிய, நடுத்தர மக்களையும் கடுமையாகப் பாதித்துள்ளது.

தமிழக அரசின் மதிப்புக் கூட்டு வரி உயா்வு, மத்திய அரசின் தொடா் விலையேற்றம் என்ற இருமுனை தாக்குதலால் சென்னையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.5.68-ஆகவும், டீசல் விலை ரூ.4.93-ஆகவும் அதிகரித்துள்ளது.

எனவே, விலைவாசி உயா்வுக்கும், பேருந்து கட்டண உயா்வுக்கும் வழி வகுக்கும் பெட்ரோல் - டீசல் விலையை உயா்வை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com