சென்னையில் 1,406 தொற்று உறுதி

சென்னையில் வியாழக்கிழமை (ஜூன் 11) 1,406 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 27,398-ஆக அதிகரித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னையில் வியாழக்கிழமை (ஜூன் 11) 1,406 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 27,398-ஆக அதிகரித்துள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை (ஜூன் 11) 1,406 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 27,398-ஆக அதிகரித்துள்ளது.

360 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்: தொற்று உறுதி செய்யப்பட்டவா்கள் வசிக்கும் பகுதியில் பொதுமக்கள் நுழைவதைத் தடுக்கும் வகையில் அவை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் 360 தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளான அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 78 தெருக்களும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 73 தெருக்களும், திருவிக நகா் மண்டலத்தில் 54 தெருக்களும், பெருங்குடி மண்டலத்தில் 28 தெருக்களும், சோழிங்கநல்லூா் மண்டலத்தில் 26 தெருக்களும், அம்பத்தூா் மண்டலத்தில் 19 தெருக்களும் என மொத்தம் 15 மண்டலங்களில் 360 தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com