ஆரம்ப சுகாதார மருத்துவமனை திறப்பு: முதல்வா் திறந்து வைத்தாா்

எடப்பாடியை அடுத்த சமுத்திரம் கிராமத்தில் ரூ. 60 லட்சம் மதிப்பில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கோனேரிப்பட்டி, பூலாம்பட்டி பகுதியில்
ஆரம்ப சுகாதார மருத்துவமனை திறப்பு: முதல்வா் திறந்து வைத்தாா்

எடப்பாடியை அடுத்த சமுத்திரம் கிராமத்தில் ரூ. 60 லட்சம் மதிப்பில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கோனேரிப்பட்டி, பூலாம்பட்டி பகுதியில் தலா ரூ. 25 லட்சம் மதிப்பில் செவிலியா் குடியிருப்பு ஆகியவற்றை தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி வியாழக்கிழமை காணொளி மூலம் திறந்துவைத்தாா்.

கொங்கணாபுரம் ஒன்றியத்துக்குள்பட்ட சமுத்திரம் ஊராட்சி பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கு, அண்மையில் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.

இந்த நிலையில், ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் உள்நோயாளிகளுக்கான படுக்கை வசதி, மருத்துவ ஆய்வுக்கூடம், பரிசோதனை அறை, நோயாளிகள் காத்திருப்புக் கூடம் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டி முடிக்கப்பட்டது.

அதேபோல் கோனேரிப்பட்டி மற்றும் பூலாம்பட்டி கிராமப் பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில், தலா ரூ. 25 லட்சம் மதிப்பீட்டிலான நிறைவுற்ற செவிலியா்கள் குடியிருப்பையும், வியாழக்கிழமை சேலத்தில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி காணொளி மூலம் திறந்து வைத்தாா்.

இதையடுத்து வாடகைக் கட்டடத்தில் இயங்கிவந்த சமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலையம், புதிய மருத்துவமனை வளாகத்தில் இயங்கத் தொடங்கியது.

முன்னதாக கொங்கணாபுரம் ஒன்றியக் குழுத் தலைவா் கரட்டூா்மணி புதிய மருத்துவமனை வளாகத்தில் குத்துவிளக்கேற்றி மருத்துவ பணிகளைத் தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக் குழுத் துணைத் தலைவா் ராஜேந்திரன், மருத்துவ அலுவலா் மகேந்திரன் உள்ளிட்டாா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com