புதுவைக்கு கூடுதல் நிதி வழங்க மத்திய அமைச்சரிடம், முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தல்

புதுவைக்கு கூடுதல் நிதி தரும்படி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.
புதுவைக்கு கூடுதல் நிதி வழங்க மத்திய அமைச்சரிடம், முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தல்

புதுச்சேரி: புதுவைக்கு கூடுதல் நிதி தரும்படி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

மத்திய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் காணொளி காட்சி மூலம் இன்று நடைபெற்றது. இதில் புதுவை முதல்வர் நாராயணசாமி பங்கேற்றுப் பேசினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது:

கரோனா காலகட்டத்தில் புதுவை பொருளாதார ரீதியாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தொழில் முனைவர்கள் தங்களது ஜிஎஸ்டி வரியைக் கட்டுவதற்கு கால அவகாசம் மத்திய அரசு அளித்துள்ளதால் புதுவைக்கு கிடைக்க வேண்டிய வருவாய் மேலும் தாமதமாகி வருகிறது. ஏற்கெனவே நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் புதுவைக்கு மத்திய அரசு உடனடியாக கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும்.
இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டேன். 

புதுவையை பொறுத்தவரை இப்பொழுது நிதி ஆதாரத்தை கையாள முதல்வருக்கு ரூ 10 கோடி வரையும் ஆளுநருக்கு ரூ 50 கோடி வரையும் துறை செயலாளருக்கு ஒரு கோடி வரையும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு தில்லி அமைச்சரவை கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் அன்புள்ள முதல்வருக்கு 50 கோடி வரையும் அமைச்சரவைக்கு ரூ 100 கோடி வரையும் துறை செயலாளருக்கு ரூ.5 கோடி வரையும் நிதியைக் கையாள அதிகாரம் பதில் அளித்து மத்திய உள்துறை உத்தரவிட்டிருந்தது.

அதனடிப்படையில் சட்டப்பேரவை உள்ள புதுவைக்கும் இதே முறையில் நிதியைக் கையாள அதிகாரம் வழங்கும்படி மத்திய அரசுக்கு 2018ம் ஆண்டு கடிதம் அனுப்பி இருந்தேன். அதற்கு ஒப்புதல் அளித்து மத்திய உள்துறை கடிதம் எனக்கு அனுப்பி இருந்தது. ஆனால் துணைநிலை ஆளுநர் நிதி அதிகாரத்தை முதல்வருக்கும் அமைச்சர் வைக்கும் பகிர்ந்தளிக்கத் தொடர்ந்து மறுத்து வருகிறார். எனவே இரண்டு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய உள்துறை உத்தரவிட்ட படி நிதி ஆதாரத்தைப் பகிர்ந்தளிக்கத் துணைநிலை ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என மத்திய அரசுக்கு மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளோம்.

புதுவையில் 80 வயது முதியவர் ஒருவர் இன்று காரணத்தால் இறந்துள்ளார். இதன்மூலம் கரோனாவால் தாக்கப்பட்டு இறந்தவர்கள் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. புதுவையில் கரோனா தாக்கத்தைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் தமிழகத்திலிருந்து குறிப்பாக சென்னையிலிருந்து புதுவைக்கு வரும் பொதுமக்களால் தொடர்ந்து கரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. 
பேறுகால சிகிச்சை உள்ளிட்ட முக்கிய சிகிச்சைகளுக்காகப் புதுச்சேரிக்கு  வரும் தமிழக மக்களால் புதுவையில் கரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. 

எனவே தமிழக புதுவை எல்லையில் மருத்துவ கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து அவருடைய குடும்ப உறுப்பினர்கள் நண்பர்களுக்கு தான் அதிகமாக பரவுகிறது. எனவே பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் முகக் கவசம் அணிய வேண்டும் சமூக இடைவெளியை விட்டுப் பழக வேண்டும் என்றார் முதல்வர் நாராயணசாமி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com