அறந்தாங்கி அருகே 6 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்டு அளவீடு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 6 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்டு அளவீடு செய்யப்பட்டது. 
அறந்தாங்கி அருகே 6 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்டு அளவீடு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 6 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்டு அளவீடு செய்யப்பட்டது.

ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் சரகம், களபம் வருவாய் கிராமத்தில் புல எண்.1 விஸ்தீரணம் 53.76.5 ஹெக்டேர் கோதை மங்கலம் ஏரி பொதுப்பணித் துறைக்குச் சொந்தமானது. 

இந்த ஏரிக்கு அருகே அமைந்துள்ள சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா கே.சிருவனுார் கிராம பொதுமக்களால் ஏரியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 05.02.0 ஹெக்டேர் பரப்பளவில் பயிர் செய்யப்பட்ட நெல் சாகுபடி பயிர்கள் கடந்த ஆண்டு நவம்பர் 23-ம் தேதி அறந்தாங்கி வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில் அகற்றப்பட்டது. 

இரு மாவட்ட எல்லை காரணமாக ஆக்ரமணம் அகற்றப்படாமல் இருந்த 6 ஏக்கர் பரப்பளவுள்ள ஆக்கிரமிப்பு நிலம் இன்று சனிக்கிழமை ஆவுடையார் கோவில் வட்டாட்சியர் மு. மார்டின் லூதர் கிங் தலைமையில் அறந்தாங்கி காவல் துணை கண்காணிப்பாளர் பி.பாலமுருகன், பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் முன்னிலையில் நில அளவை செய்யப்பட்டு எல்லை வரையறை செய்யப்பட்டது. இதன் மூலம் 6 ஏக்கர் பொதுப்பணித் துறை ஏரி பொதுமக்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com