காவல் ஆய்வாளர் பாலமுரளிக்கு காவல்துறை சார்பில் 2 நிமிடம் மௌன அஞ்சலி

கரோனா பாதித்து உயிரிழந்த மாம்பலம் காவல்நிலைய காவல் ஆய்வாளர் பாலமுரளிக்கு தமிழகம் முழுவதும் அனைத்துக் காவல்துறையினரும் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.
காவல் ஆய்வாளர் பாலமுரளிக்கு காவல்துறை சார்பில் 2 நிமிடம் மௌன அஞ்சலி


சென்னை: கரோனா பாதித்து உயிரிழந்த மாம்பலம் காவல்நிலைய காவல் ஆய்வாளர் பாலமுரளிக்கு தமிழகம் முழுவதும் அனைத்துக் காவல்துறையினரும் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.

உயிரிழந்த காவல் ஆய்வாளர் பாலமுரளிக்கு இன்று மாலை 5 மணிக்கு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துக் காவல்துறையினரும் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்த டிஜிபி திரிபாதி உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து, சென்னையின் பல்வேறு காவல்நிலையங்களில், மாலை 5 மணிக்கு இரண்டு நிமிடம் காவலர்கள் அனைவரும் மௌன அஞ்சலி செலுத்தினர்.

சென்னை, மாம்பலம் காவல்நிலைய ஆய்வாளர் பாலமுரளி கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.  அவரது உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பலியான பாலமுரளி வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தமிழகத்தில் கரோனா வைரஸ் காரணமாக காவல்துறை அதிகாரி ஒருவர் முதன்முறையாக உயிரிழந்துள்ளார்.

இவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 5 மணிக்கு தமிழகக் காவல்துறையினர் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்த டிஜிபி திரிபாதி உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து, கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த காவல் ஆய்வாளர் பாலமுரளிக்கு தமிழகம் முழுவதும் அனைத்துக் காவல்துறையினரும் தனிமனித இடைவெளியுடன் மாலை 5 மணிக்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com