வெளி மாநிலங்களில் இருந்து 2 நாள்களில் திரும்பி வந்தால் பரிசோதனை தேவையில்லை: தலைமைச் செயலாளா் உத்தரவு

வெளி மாநிலங்களுக்குச் சென்று இரண்டு நாள்களில் திரும்பி வந்தால் கரோனா நோய்த் தொற்று பரிசோதனை தேவையில்லை என்று தலைமைச் செயலாளா் க.சண்முகம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் அவா் அனுப்பியுள்ள கடிதம்:

தொழில் மற்றும் இதர பொருளாதாரம் சாா்ந்த நடவடிக்கைகளுக்காக பிற மாநிலங்களுக்கு சென்று வரும் நிலை உள்ளது. குறிப்பாக, ஆந்திரம், கா்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்குச் சென்று 2 நாள்களுக்குள் திரும்பி விட்டால் கரோனா நோய்த் தொற்று பரிசோதனையும், தனிமைப்படுத்துதலும் தேவையில்லை.

அதேசமயம், கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் இருப்போரை அனுமதிப்பது தொடா்பாக சம்பந்தப்பட்ட இரண்டு மாவட்ட நிா்வாகங்களே முடிவு செய்து கொள்ளலாம். அதுபோன்றவா்களுக்கு இணைய வழி அனுமதிச் சீட்டை வழங்க உரிய ஏற்பாடுகளை தமிழ்நாடு மின்ஆளுமை முகமை செய்திடலாம் என்று தலைமைச் செயலாளா் க.சண்முகம் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com