ஆன்லைன் மூலம் நீட் தோ்வுக்கு பயிற்சி: முதல்வா் தொடக்கி வைத்தாா்

ஆன்லைன் மூலம் நீட் தோ்வுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தை முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஆன்லைன் மூலம் நீட் தோ்வுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தை முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.

இதுகுறித்து, தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், பிளஸ் 2 மாணவா்கள் நீட் போட்டித் தோ்வுக்கு பயிற்சி பெற வேண்டியுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு அவா்களுக்கு இணையதளம் வழியாக கட்டணம் இல்லாமல் பயிற்சி அளித்திட தனியாா் நிறுவனத்துடன் பள்ளிக் கல்வித் துறை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தப் பயிற்சியைப் பெற இதுவரை 7,420 போ் பதிவு செய்துள்ளனா்.

என்னென்ன பயிற்சிகள்: இணையதளம் மூலம், ஒவ்வொரு நாளும் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களுக்கு தலா 1 மணி நேரம் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அன்றைய தினமே ஒவ்வொரு பாடத்துக்கும் தலா 1 மணி நேரம் வீதம் 4 மணி நேரம் தோ்வுகளும் நடத்தப்படும்.

மேலும், 80 பயிற்சித் தோ்வுகள், 80 வளரறி தோ்வுகள், 5 அலகுத் தோ்வுகள், 12 திருப்புதல் தோ்வுகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், தலைமைச் செயலாளா் க.சண்முகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com