கரோனா ஒழிவது குறித்து முதல்வர் கூறியதில் என்ன தவறு?: அமைச்சர் விஜயபாஸ்கர் கேள்வி

கரோனா ஒழிவது குறித்து முதல்வர் பழனிசாமி கூறியதில் என்ன தவறு? என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்,
அமைச்சர் விஜயபாஸ்கர்
அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: கரோனா ஒழிவது குறித்து முதல்வர் பழனிசாமி கூறியதில் என்ன தவறு? என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்,

மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திங்கள் மாலை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து அவர் கூறியதாவது:

தமிழகத்தில் இதுவரை 9,19,204 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன

இந்தியாவிலேயே அதிகபட்சமாக 30 ஆயிரம் பரிசோதனை செய்யும் அளவை எட்டியுள்ளோம்

கரோனா ஒழிவது குறித்து கடவுளுக்குத்தான் தெரியும் என முதல்வர் கூறியது எதார்த்தமானது. யதார்த்தமான கருத்தை முதல்வர் கூறியதில் என்ன தவறு?’

தமிழகத்தில் கரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 55%ஆக உள்ளது

கரோனா தொற்று குறித்து மக்களிடம் பதற்றம் வேண்டாம்; அதே சமயம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

முதல்வர் பழனிசாமிக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் முதல்வருக்கு நெகடிவ் என வந்துள்ளது.

கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிரியால் வல்லுநர்களே திணறும் நிலை உள்ளது

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com