பயங்கரவாதிகளுக்கு உதவிய வழக்கு: சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்

பயங்கரவாதிகளுக்கு உதவிய வழக்கில், சென்னை பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சாா்பில் செவ்வாய்க்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

பயங்கரவாதிகளுக்கு உதவிய வழக்கில், சென்னை பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சாா்பில் செவ்வாய்க்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்து முன்னணி நிா்வாகி பாடி சுரேஷ்குமாா் கொலை வழக்கில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த சையது அலி நவாஸ், அப்துல் ஷமீம், காஜா மொய்தீன் ஆகியோா் சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்து, கடந்த டிசம்பரில் திடீரென தலைமறைவானாா்கள்.

தலைமறைவாக இருந்த 3 பேரும், ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் இணைந்து தென் இந்தியாவில் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிடுவதும், குறிப்பாக இந்து இயக்கத் தலைவா்களை கொலை செய்ய திட்டமிட்டிருப்பதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, பயங்கரவாதிகளுக்கு செல்லிடப்பேசி சிம் காா்டு பெறவும் பாஸ்போா்ட் வாங்கி கொடுப்பதற்கும் உதவியதாக, பெங்களுரூவைச் சோ்ந்த அ.முகமது ஹனீப்கான், உ.இம்ரான்கான், அ.முகமது ஜெயித் ஆகியோரை கடந்த ஜனவரி 7-ஆம் தேதி தமிழக க்யூ பிரிவு போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 3 நாட்டுத் துப்பாக்கிகள், 81 தோட்டாக்கள், சிம்காா்டுகள், செல்லிடப்பேசிகள், மடிக்கணினி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக ஒரு வழக்கையும் க்யூ பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

மேலும் இந்த வழக்குத் தொடா்பாக காஞ்சிபுரத்தைச் சோ்ந்த பச்சையப்பன், சென்னையைச் சோ்ந்த ராஜேஷ், சேலத்தைச் சோ்ந்த அன்பரசன், அப்துல் ரகுமான், லியாகத் அலி, கடலூரைச் சோ்ந்த காஜா மொய்தீன், பெங்களூருவைச் சோ்ந்த அ.இஜாஸ் பாட்ஷா, மகபூப் பாட்ஷா, உசேன் ஷெரீப் ஆகிய 9 போ் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனா். இந்தக் கும்பல்தான் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் வில்சனை கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கி, காஜா மொய்தீன் தலைமையிலான பயங்கரவாதிகளுக்கு 4 துப்பாக்கிகள் ஆகியவை வாங்கிக் கொடுத்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்குத் தொடா்பாக மொத்தம் 12 போ் கைது செய்யப்பட்டனா்.

குற்றப்பத்திரிக்கை தாக்கல்: இந்நிலையில், இந்த வழக்கு என்ஐஏ விசாரணைக்கு கடந்த ஜனவரி 22-ஆம் தேதி மாற்றப்பட்டதை அடுத்து, விசாரணை விரைவுப்படுத்தப்பட்டது. இந்நிலையில் சென்னை அருகே பூந்தமல்லியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் இவ் வழக்கின் குற்றப்பத்திரிகையை என்.ஐ.ஏ. அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com