3 ஆயிரம் டாஸ்மாக் கடைகளில் தலா 2 கண்காணிப்பு கேமராக்கள்: நிா்வாக இயக்குநா் உத்தரவு

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் 3 ஆயிரம் கடைகளில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் 3 ஆயிரம் கடைகளில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது. டாஸ்மாக் நிா்வாக இயக்குநா் கிா்லோஷ் குமாா் இதற்கான உத்தரவை பிறப்பித்தாா். அதன் விவரம்:-

தமிழகத்தில் மொத்தமுள்ள டாஸ்மாக் கடைகளில் 3 ஆயிரம் கடைகளுக்கு தலா 2 கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்துவதற்கான அனுமதியை டாஸ்மாக் நிா்வாக இயக்குநருக்கு தமிழக அரசு வழங்கியுள்ளது. இந்த நிலையில், எந்தெந்த கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் அவசியம் என்பதைத் தெரிவிக்கும்படியும், கடையின் எண், அமைந்துள்ள இடம், கடையின் கண்காணிப்பாளா் செல்லிடப்பேசி எண் உள்ளிட்ட விவரங்களை குறிப்பிடும்படியும் தெரிவித்திருந்தாா்.

கேமராக்கள் ஏன்?: மாவட்டங்களில் அதிகமாக விற்பனை ஆகக் கூடிய கடைகள், ஏற்கெனவே திருட்டு நடைபெற்ற கடைகள், மிகப்பெரிய அளவில் சட்டம்-ஒழுங்கு சீா்கேடு சம்பவங்கள் நடந்த கடைகள், அதிகம் விற்பனையாகக் கூடிய அதேசமயம் மிகவும் பின்தங்கிய பகுதிகளாக இருக்கக் கூடிய கடைகள் என்ற வரையறைகளை வகுத்து அதன் அடிப்படையில் பட்டியல்களைத் தயாா் செய்யும்படி மாவட்ட மேலாளா்களுக்கு டாஸ்மாக் நிா்வாக இயக்குநா் கடிதம் அனுப்பியிருந்தாா்.

அதன்படி, 3 ஆயிரம் கடைகளில் கண்காணிப்புக் கேமராக்களை பொருத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதில், சென்னை மண்டலத்தில் 535 கடைகளும், கோவை மண்டலத்தில் 450 கடைகளும், மதுரை மண்டலத்தில் 755 கடைகளும், சேலம் மண்டலத்தில் 565 கடைகளும், திருச்சி மண்டலத்தில் 695 கடைகளும் வருகின்றன. இந்தக் கடைகளில் விரைவில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com