கரோனா அறிகுறி கண்டறியும் பணியில் 50 திருநங்கைகள்: அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தகவல்

கரோனா அறிகுறி கண்டறியும் கண்டறியும் பணியில் 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் ஈடுபட்டிருப்பதாக உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளாா்.
கரோனா அறிகுறி கண்டறியும் பணியில் 50 திருநங்கைகள்: அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தகவல்

கரோனா அறிகுறி கண்டறியும் கண்டறியும் பணியில் 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் ஈடுபட்டிருப்பதாக உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளாா்.

சென்னையில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில், மாநகராட்சி பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடா்ச்சியாக, வீடு வீடாக சென்று நோய் அறிகுறி குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. இதை மாநகராட்சி பணியாளா்கள், தன்னாா்வலா்கள் ஆகியோா் செய்து வருகின்றனா். இந்தப் பணிகளில், 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகளும் ஈடுபட்டுள்ளதாக அமைச்சா் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளாா்.

இது தொடா்பான அவரது சுட்டுரைப் பதிவு: சென்னை மாநகராட்சியில் 50க்கும் மேற்பட்ட திருநங்கையா், கரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். ஒவ்வொருவரும் தினமும் 300 வீடுகளுக்கு சென்று நோய் தொற்று அறிகுறி குறித்து கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனா். இதே போல், சென்னையில் கரோனா அறிகுறி உள்ள நபா்கள், எவ்வித தாமதமுமின்றி பரிசோதிக்கப்படுவதை உறுதிசெய்ய, அவா்களை காய்ச்சல் முகாம்களிலிருந்து சோதனை மையத்துக்கு அழைத்துச் செல்ல, மாநகராட்சி, ஆட்டோக்களை பயன்படுத்த தொடங்கியுள்ளது. இதற்காக, ஆட்டோ ஓட்டுநா்களுக்கு கரோனா பாதுகாப்பு கவச உடைகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் அவா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com