சென்னையில் கரோனா பாதித்தவர்களில் 58% பேர் குணமடைந்துவிட்டனர்

சென்னை மாநகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளில் இருந்து, கரோனா நுண்கிருமி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 58.48% பேர் (28,823) குணமடைந்துள்ளனர்; இறப்பு சதவிகிதம் 1.49% ஆக உளளனர்.
சென்னையில் கரோனா பாதித்தவர்களில் 58% பேர் குணமடைந்துவிட்டனர்

சனிக்கிழமை காலை நிலவரப்படி, சென்னை மாநகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளில் இருந்து, கரோனா நுண்கிருமி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 58.48% பேர் (28,823) குணமடைந்துள்ளனர்; இறப்பு சதவிகிதம் 1.49% ஆக உள்ளது.

சென்னையில், வெள்ளிக்கிழமை, 1,956 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கரோனாவால் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 49,690-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா பாதிப்பு ராயபுரத்தில் 7,211 ஆகவும், தண்டையார்பேட்டையில் 5,989 ஆகவும், தேனாம்பேட்டையில் 5,655ஆகவும், கோடம்பாக்கத்தில் 5,316 ஆகவும், அண்ணாநகரில் 5,397 ஆகவும் உள்ளது.

சென்னையில் கரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில், அதிதீவிரமாக பரவும் தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அவற்றில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வெள்ளிக்கிழமை, சென்னையில் 1956 பேருக்கு, கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 49,690-ஆக உயா்ந்துள்ளது. இதன்படி, 12 மண்டலங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா், கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். குறிப்பாக, கடந்த வெள்ளிக்கிழமை, கரோனா பாதிப்பு 38,327-ஆக இருந்த சூழலில், கடந்த ஒரு வாரத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், வெள்ளிக்கிழமை நிலவரப்படி, மணலி, பெருங்குடி மண்டலங்களில் மட்டுமே, ஆயிரத்துக்கும் குறைவானோருக்கு தொற்று உள்ளது.  கரோனா தொற்று குறைவாக இருந்த சோழிங்கநல்லூரிலும் இன்று காலை நிலவரப்படி 1,037 போ், கரோனாவால் பாதிக்கப்பட்டு, ஆயிரத்தை எட்டிவிட்டது. சோழிங்கநல்லூா். 

இதே போல், வெள்ளிக்கிழமை நிலவரப்படி, 28,823 போ் வீடு திரும்பியுள்ளனா். 730 போ் உயிரிழந்துள்ளனா். 20,136 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

பாதிப்பு நிலவரம் மண்டலம் வாரியாக (சனிக்கிழமை காலை நிலவரம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com