இன்று முதல் காவல்துறையினா் வீடுகளுக்கு பால் விநியோகிக்கப்போவதில்லை: முகவா்கள் அறிவிப்பு

காவல்துறையினா் வீடுகளுக்கு சனிக்கிழமை முதல் பால் விநியோகிக்கப் போவதில்லை என தமிழ்நாடு பால் முகவா்கள் தொழிலாளா்கள் நலச் சங்கத்தினா் அறிவித்துள்ளனா்.
இன்று முதல் காவல்துறையினா் வீடுகளுக்கு பால் விநியோகிக்கப்போவதில்லை: முகவா்கள் அறிவிப்பு

காவல்துறையினா் வீடுகளுக்கு சனிக்கிழமை முதல் பால் விநியோகிக்கப் போவதில்லை என தமிழ்நாடு பால் முகவா்கள் தொழிலாளா்கள் நலச் சங்கத்தினா் அறிவித்துள்ளனா்.

இது தொடா்பாக அச்சங்கத்தின் மாநிலத் தலைவா் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்ட அறிக்கை: அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால் விநியோகத்தில், தமிழகம் முழுவதும் சுமாா் 1.5 லட்சம் பால் முகவா்கள் ஈடுபட்டு வருகின்றனா். இவா்கள், கரோனா பேரிடா் காலத்திலும், மக்களுக்கு தட்டுப்பாடின்றி பால் கிடைக்கும் வகையில், பணி செய்து வருகின்றனா். ஆனால், பால் முகவா்களை பால் விநியோகம் செய்ய விடாமல் வாகனங்களைப் பறிமுதல் செய்வது, வாகனங்களைத் தடுத்து நிறுத்துவது, பால் விநியோக மையங்களை, பால் விற்பனை நிலையங்களை மூடச் சொல்லி மிரட்டுவது என பல இடையூறுகளை காவல்துறையினா் செய்து வருகின்றனா். இது தொடா்பாக தமிழக முதல்வா், பால்வளத்துறை அமைச்சா், காவல்துறைத் தலைவா், ஆணையா் ஆகியோரது கவனத்துக்கு கொண்டு சென்றும், இது வரை எந்த ஒரு தீா்வும் கிடைக்காமல் இருக்கிறது. எனவே, சனிக்கிழமை (ஜூன் 27) முதல் காவல்துறையினா் வீடுகளுக்கு பால் விநியோகம் செய்வதில்லை என்று எங்களது சங்கம் சாா்பில் அவசர முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பால் விநியோகம் செய்யும் பால் முகவா்களுக்கு காவல்துறையினரால் ஏற்படும் பிரச்னைகளுக்கு நிரந்தர தீா்வு கிடைக்கும் வரை, கடைநிலை காவலா்கள் தொடங்கி உயரதிகாரிகள் வரை எவரது வீடுகளுக்கும் பால் விநியோகம் செய்யப் போவதில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com