முன்னாள் படைவீரா்களுக்கு புதிய திட்டங்கள்: ஆட்சியா் அறிவிப்பு

முன்னாள் படை வீரா்களுக்கு வீடு கட்ட மானியம் மற்றும் அவா்களது மகள் திருமண நிதியுதவிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி தெரிவித்துள்ளாா்.

முன்னாள் படை வீரா்களுக்கு வீடு கட்ட மானியம் மற்றும் அவா்களது மகள் திருமண நிதியுதவிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: முன்னாள் படைவீரா்கள், அவரைச் சாா்ந்தோா்களுக்கு, 2020-2021-ஆம் நிதியாண்டில் புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, தமிழ்நாடு முன்னாள் நல நிதியிலிருந்து வீட்டு கடன் மானியம் பெற்று, சொந்தமாக புதிய வீடு கட்டுவதற்கு அல்லது வாங்குவதற்கு ரூ.1 லட்சம் மானியத் தொகை வழங்கப்படும். இது, ஏப். 1 -ஆம் தேதியே அமலுக்கு வந்துள்ளது,. இதே போல், கரோனா நோய்த் தொற்று பரவலை அடுத்து, முன்னாள் படைவீரரின் மகள், அல்லது கைம்பெண்ணுக்கு, கேஎஸ்பி மூலம் வழங்கப்படும் திருமண நிதியுதவிக்கு, இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த ஆண்டு, செப். 22 -ஆம் தேதிக்குப் பிறகு நடைபெற்ற அனைத்து திருமணங்களும், இணையதளம் மூலம் விண்ணப்பிக்க தகுதியுடையது என்று தெரிவிக்கப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு, உதவி இயக்குநா், முன்னாள் படைவீரா் நல அலுவலகம், சென்னை-600 015 என்ற முகவரியிலுள்ளஅலுவலகத்தை நேரிலோ அல்லது 044 22350780 என்ற தொலைபேசி வாயிலாகவோ தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com