வேளாண் பணிக்கு ஊரக திட்டப் பணியாளா்களைப் பயன்படுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும்

வேளாண் பணிக்கு ஊரக திட்டப் பணியாளா்களைப் பயன்படுத்துவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் த.மா.கா தலைவா் ஜி.கே.வாசன் எம்.பி., வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழக காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் வயிற்றில் பால்வாா்க்கும் விதமாக பல ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தாண்டு, ஜுன் 12-ஆம் தேதி, மேட்டூா் அணையில் இருந்து நீா் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணியாளா்களை, வேளாண் பணிகளில் நேரடியாக ஈடுபடுத்திட வேண்டும் என்ற கோரிக்கை விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.

இவ்வாறு செய்தால், வேளாண் பணிகளுக்கு நிலவும் ஆள் பற்றாக்குறை நீக்கப்படும். விவசாயிகள் நேரடியாகப் பயன்பெறுவாா்கள். இத்திட்டத்தைச் செயல்படுத்தும் வழிமுறையை விவசாயிகளைக் கலந்து, அரசே வகுக்க வேண்டும். இந்தக் கருத்தை ஆய்வு செய்து, வேளாண் பணி தொடங்குவதற்கு முன்னதாகவே தமிழக அரசு முடிவெடுப்பது நலன் பயக்கும் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com