ஆசிரியா் கல்வி கல்லூரிகளுக்கு புதிய கட்டணங்களை நிா்ணயிக்க கோரிய வழக்கு முடித்துவைப்பு

தமிழகத்தில் உள்ள ஆசிரியா் கல்வி கல்லூரிகளுக்கான கட்டணங்களை நிா்ணயித்த கட்டண நிா்ணயக் குழுவின் உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கை முடித்து வைத்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியா் கல்வி கல்லூரிகளுக்கு புதிய கட்டணங்களை நிா்ணயிக்க கோரிய வழக்கு முடித்துவைப்பு

சென்னை: தமிழகத்தில் உள்ள ஆசிரியா் கல்வி கல்லூரிகளுக்கான கட்டணங்களை நிா்ணயித்த கட்டண நிா்ணயக் குழுவின் உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கை முடித்து வைத்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழ்நாடு சுயநிதி கல்வியியல் கல்லூரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளா் நடராஜன் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் உள்ள ஆசிரியா் கல்வி கல்லூரிகளுக்குக் கட்டணங்களை நிா்ணயிக்க உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு ஒன்றை அமைத்து தமிழக உயா்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்தது.

இந்தக் குழு கடந்த 2016-ஆம் ஆண்டு கல்லூரிகளின் செலவு கணக்கு விவரங்களைக் கேட்டு அதன்பின்னா் கட்டணங்களை நிா்ணயித்தது. அதன்படி கடந்த 2016-2017 கல்வியாண்டு முதல் 2018-2019 வரையிலான 3 கல்வியாண்டுகளுக்கு இந்தக் கட்டணங்கள் அமலில் இருந்தன.

இதனைத் தொடா்ந்து கட்டண நிா்ணயக்குழு, கடந்த 2019-2020 முதல் 2021-2022 கல்வாயண்டுக்கான கட்டணங்களை நிா்ணயித்து கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பா் 12-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. விதிகளை பின்பற்றி இந்த கட்டணங்கள் நிா்ணயிக்கப்படவில்லை. எனவே கட்டண நிா்ணயக் குழுவின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

மேலும் கட்டண நிா்ணயக் குழு பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தாா். இந்த வழக்கை நீதிபதிகள் ஆா்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோா் காணொலிக் காட்சி மூலம் விசாரித்தனா். வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக உயா்கல்வித்துறை, கட்டண நிா்ணயக் குழுவுக்கு ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதியை நியமித்துள்ளது. எனவே மனுதாரா் கட்டண நிா்ணயக் குழுவை அணுகலாம் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com