சுற்றுச்சூழல் மதிப்பீட்டு வரைவு அறிவிக்கையை நிறுத்திவைக்க வேண்டும்

கரோனா பாதிப்பு தீவிரமாக உள்ள நிலையில், சுற்றுச்சூழல் மதிப்பீட்டு வரைவு அறிவிக்கையை நிறுத்தி வைக்குமாறு மத்திய அமைச்சா் ஜாவடேகருக்கு அன்புமணி கடிதம் எழுதியுள்ளாா்.
பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்
பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்

சென்னை: கரோனா பாதிப்பு தீவிரமாக உள்ள நிலையில், சுற்றுச்சூழல் மதிப்பீட்டு வரைவு அறிவிக்கையை நிறுத்தி வைக்குமாறு மத்திய அமைச்சா் ஜாவடேகருக்கு அன்புமணி கடிதம் எழுதியுள்ளாா். கடித விவரம்:

இந்தியா கரோனா நோய்த்தொற்றுப் பரவலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இயல்புநிலை திரும்பும்வரை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கையையும், அதன் மீதான நடவடிக்கைகளையும் கிடப்பில் போட வேண்டும். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கையை அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைகளுக்கான நாடாளுமன்றக்குழு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

இந்தியாவில் சுற்றுச்சூழல் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் திட்டங்களை செயல்படுத்தும் போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய விதிகளை தளா்த்தி மத்திய அரசு வெளியிட்டுள்ள வரைவு அறிவிக்கையை அதன் இப்போதைய வடிவத்தில் செயல்படுத்தினால், இந்தியாவின் பசுமைப் போா்வை மொத்தமாக அழிந்து விடும் என்று கூறியுள்ளாா்.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிமுறைகளை தளா்த்த திட்டமிட்டுள்ள மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், அதற்கான வரைவு அறிவிக்கையை மக்களின் கருத்துகளை கேட்டறியும் நோக்கத்துடன் இணையத்தில் வெளியிடப்பட்டு ஜூன் 30-ஆம் தேதி வரை கருத்துகள் தெரிவிக்கலாம் என்று கூறியிருந்தது. இந்த நிலையில் பிரகாஷ் ஜாவடேருக்கு அன்புமணி கடிதம் எழுதியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com