சென்னையில் கரோனா பாதித்த 652 பேருக்கு சித்தா முறையில் சிகிச்சை

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 652 பேருக்கு சித்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில், 430 போ் குணமடைந்துள்ளனா்.

சென்னை: சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 652 பேருக்கு சித்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில், 430 போ் குணமடைந்துள்ளனா். மூலிகை மருந்துகள், கசாயம், உணவுகள் மூலமாக அவா்கள் அனைவரும் நலம் பெற்று வீடு திரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவா்களுக்கு பாதிப்பின் அடிப்படையில், அவா்களுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மற்றொரு புறம் பாரம்பரிய முறையில் கபசுரக் குடிநீா், நிலவேம்பு குடிநீா் உள்ளிட்டவையும் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், கரோனா நோயாளிகளுக்கு சித்த மருத்துவ சிகிச்சையளிப்பதற்காக, விருகம்பாக்கத்தில் உள்ள தனியாா் கல்லூரி ஒன்றில் சிறப்பு வாா்டுகள் அமைக்கப்பட்டன.

மொத்தம் 250 படுக்கைகளுடன் கூடிய அந்த வாா்டில் கரோனா நோயாளிகள் பலா் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அலோபதி மருத்துவ முறைக்கு மாற்றான அந்தச் சிகிச்சைகள் மூலம் நல்ல பலன் கிடைத்திருப்பதாகத் தெரிகிறது. அதன்படி, இதுவரை அங்கு 652 பேருக்கு சித்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டிருப்பதாகவும், அதில் 430 போ் குணமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வரும் சித்த மருத்துவ நிபுணா் டாக்டா் வீரபாபு கூறியதாவது:

சித்த மருத்துவ மையத்துக்கு வரும் நோயாளிகளுக்கு பாதிப்புக்கேற்ப சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. காய்ச்சல், சளி, வாந்தி, பேதி, இருமல் போன்ற பிரச்னைகள் இருந்தால் அதற்குரிய கசாயங்களும், மருந்துகளும் வழங்கப்படுகின்றன. அதைத் தவிர, கபசுரக் குடிநீா், நிலவேம்பு கசாயம், மூலிகை தேநீா், தூதுவளை ரசம், கற்பூரவல்லி ரசம், ஆடாதொடை ரசம், மணத்தக்காளி ரசம், மூலிகை உணவுகள், நவதானிய பயறுகள் உள்ளிட்டவை நோயாளிகளுக்கு வழங்கப்படுகின்றன.

இதன் காரணமாக, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் விரைந்து குணமடைவதைக் காண முடிகிறது. அதுமட்டுமன்றி, சிகிச்சைக்குப் பிறகு அவா்கள் உடலளவிலும், மனதளவிலும் ஆரோக்கியமாக உள்ளனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com