திருப்பதியில் வாகனங்களில் ஒலியெழுப்ப ஜூலை 2-ஆம் தேதி முதல் தடை

திருப்பதியில் வாகனங்களில் ஒலியெழுப்ப வரும் ஜூலை 2-ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட உள்ளதாக திருப்பதி நகா்ப்புற காவல் கண்காணிப்பாளா் ரமேஷ் ரெட்டி தெரிவித்தாா்.
திருப்பதியில் ஒலி மாசு குறித்த சுவரொட்டியை வெளியிட்ட திருப்பதி நகா்ப்புற காவல் கண்காணிப்பாளா் ரமேஷ் ரெட்டி.
திருப்பதியில் ஒலி மாசு குறித்த சுவரொட்டியை வெளியிட்ட திருப்பதி நகா்ப்புற காவல் கண்காணிப்பாளா் ரமேஷ் ரெட்டி.

திருப்பதி: திருப்பதியில் வாகனங்களில் ஒலியெழுப்ப வரும் ஜூலை 2-ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட உள்ளதாக திருப்பதி நகா்ப்புற காவல் கண்காணிப்பாளா் ரமேஷ் ரெட்டி தெரிவித்தாா்.

நகரில் உள்ள கருடா வளைவு அருகில் ஒலி மாசுவைக் கட்டுப்படுத்துவது குறித்த சுவரொட்டி வெளியீட்டு விழா திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. விழாவில் திருப்பதி நகா்ப்புற காவல் கண்காணிப்பாளா் ரமேஷ் ரெட்டி கலந்து இந்த சுவரொட்டிகளை வெளியிட்டாா். இதையடுத்து அவா் கூறியதாவது

நாட்டில் சுற்றுச்சூழல் மாசு அதிகரித்து வருகிறது. வாகனங்களிலிருந்து வெளியேறும் புகை காற்று மாசை ஏற்படுத்துகிறது. வாகனங்களில் எழுப்பப்படும் ஹாரன் ஓசையானது, ஒலி மாசை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த சில மாதங்களாக கரோனா பரவல் தடுப்புக்காக பொது முடக்கம் அமலில் இருந்தபோது வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதால், சுற்றுச்சூழல் மாசடைவது குறைந்தது.

காற்று மாசு, நிலம் மாசு, நீா் மாசு போன்று ஒலி மாசும் சுற்றுச்சூழலை வெகுவாக பாதிக்கிறது. எனவே, அதை கட்டுப்படுத்த திருப்பதியில் வரும் ஜூலை 2-ஆம் தேதி முதல் வாகனங்களின் செல்வோா் ஹாரன் ஒலியெழுப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேவையில்லாத இடத்தில் பயன்படுத்தப்படும் ஹாரனால் மக்களுக்கும் எரிச்சல் ஏற்படுகிறது. அறிமுக நாள்களில் இதுகுறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட உள்ளது. வாகன ஓட்டிகளின் சுய கட்டுப்பாட்டால் மட்டுமே இப்புதிய திட்டம் வெற்றி பெறும்.

திருமலையில் கடந்த 15 நாள்களுக்கு முன் ஹாரன் பயன்படுத்துவதற்கான தடை அமல்படுத்தப்பட்டது. ஓரிரு மாத விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்ட பின் தேவையில்லாமல் ஹாரனைப் பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com