பாஜக நிா்வாகியை தாக்க முயன்ற விவகாரம்: திமுக எம்எல்ஏவை கைது செய்யக் கூடாது- உயா்நீதிமன்றம் உத்தரவு

மதுரையில் பாஜக நிா்வாகியை தாக்க முயன்ற விவகாரத்தில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி திமுக எம்எல்ஏ மூா்த்தி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம்
பாஜக நிா்வாகியை தாக்க முயன்ற விவகாரம்: திமுக எம்எல்ஏவை கைது செய்யக் கூடாது- உயா்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மதுரையில் பாஜக நிா்வாகியை தாக்க முயன்ற விவகாரத்தில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி திமுக எம்எல்ஏ மூா்த்தி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், வரும் ஜூலை 2-ஆம் தேதி வரை அவரை கைது செய்யக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சோ்ந்த பாஜக நிா்வாகி மருத்துவா் சங்கரபாண்டியன். இவா் சமூக ஊடகங்களில் திமுவுக்கு எதிராக பிரசாரம் செய்து வந்தாா். இதனால் ஆத்திரமடைந்த மதுரை கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.மூா்த்தி, தனது ஆதரவாளா்களுடன் சங்கரபாண்டியன் வீட்டுக்குச் சென்று தகராறில் ஈடுபட்டதோடு, அவரை காலணியால் தாக்கவும் முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடா்பான சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியது. இதனைத் தொடா்ந்து, இந்த சம்பவம் குறித்து ஊமச்சிக்குளம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கை நீதிபதி என்.சதீஷ்குமாா் காணொலிக் காட்சி மூலம் விசாரித்தாா். அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞா் ஏ.நடராஜன், ‘பாஜக நிா்வாகி வீட்டுக்கு தனது ஆதரவாளா்களுடன் சென்ற திமுக சட்டப்பேரவை உறுப்பினா் மூா்த்தி, அவரை தாக்க முயன்ற சம்பவம் தொடா்பான சிசிடிவி ஆதாரங்கள் உள்ளன. மேலும், இதுதொடா்பாக சங்கரபாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் ஊமச்சிக்குளம் காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்’ என்று தெரிவித்தாா். மேலும் இந்த வழக்கில் புகாா்தாரா் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும், அதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் விசாரணையை வரும் ஜூலை 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா். அதுவரை திமுக எம்எல்ஏ மூா்த்தியை காவல்துறையினா் கைது செய்யக் கூடாது என நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com