நெல்லை, தென்காசி மாவட்டத்தில் 36,540 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினர்

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு திங்கள்கிழமை தொடங்கியது. இதில் திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த 36 ஆயிரத்து 540 மாணவர்-மாணவிகள் தேர்வை எழுதினர்.
நெல்லை, தென்காசி மாவட்டத்தில் 36,540 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினர்

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு திங்கள்கிழமை தொடங்கியது. இதில் திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த 36 ஆயிரத்து 540 மாணவர்-மாணவிகள் தேர்வை எழுதினர்.

தமிழக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு திங்கள்கிழமை தொடங்கியது. தொடர்ந்து இம்மாதம் 24ஆம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது. திருநெல்வேலி வருவாய் மாவட்டத்தின் கீழ் உள்ள சேரன்மகாதேவி கல்வி மாவட்டத்தில் 6 ஆயிரத்து 332 பேரும், திருநெல்வேலி கல்வி மாவட்டத்தில் 9 ஆயிரத்து 741 பேரும், வள்ளியூர் கல்வி மாவட்டத்தில் 6 ஆயிரத்து 414 பேரும் தேர்வு எழுதினர். 

தென்காசி வருவாய் மாவட்டத்தின் கீழ் உள்ள தென்காசி கல்வி மாவட்டத்தில் 8 ஆயிரத்து 306 பேரும், சங்கரன்கோவில் கல்வி மாவட்டத்தில் 5 ஆயிரத்து 747 பேரும் தேர்வு எழுதினர். திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மொத்தம் 36 ஆயிரத்து 540 மாணவர்-மாணவிகள் பிளஸ்-2 தேர்வை எழுதினர்.

திருநெல்வேலி மாநகராட்சி கல்லணை மேல்நிலைப் பள்ளியில் தேர்வுக்கு முன்பாக மாணவிகளின் சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது. மாணவிகள் ஒருவருக்கொருவர் கைகளை குலுக்கி வாழ்த்து தெரிவித்து தேர்வு எழுதச் சென்றனர். இம்மையத்தில் தேர்வினை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆய்வு செய்தார். 

தேர்வு குறித்து கல்வித்துறை வட்டாரங்கள் கூறியது: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பொதுத்தேர்வுகள் அமைதியான முறையில் திறம்பட நடைபெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. காலை முதல் மாலை வரை தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பும், தடையற்ற மின்சார வசதியும் ஏற்படுத்தப்படும். 

தேர்வு நடைபெறும் நாள்களில் மாவட்டத் தேர்வுக்குழு உறுப்பினர்கள் தேர்வு மையங்களில் திடீர் பார்வை செய்து தேர்வுகள் முறையாக நடைபெற கண்காணிக்க உள்ளனர். 

ஒவ்வொரு தேர்வு மையத்திலும் 10 தேர்வறைக்கு ஒரு ஆசிரியர் நிலையான படை உறுப்பினராக செயல்படுவார். ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் 3 பள்ளிகளை கண்காணிக்க ஒரு குழு வீதம் பறக்கும் படைகள் நியமிக்கப்பட்டுள்ளன என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com