குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் யாருக்கும் பாதிப்பில்லை: பாஜக தேசிய சிறுபான்மையினர் அணி துணைத் தலைவர் முனவரி பேகம்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் இந்தியாவில் வசிப்பவர்களுக்கு பாதிப்பில்லை என பாஜக சிறுபான்மையினர் அணி தேசிய துணை தலைவர் முனவரி பக்கம் தெரிவித்தார்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் யாருக்கும் பாதிப்பில்லை: பாஜக தேசிய சிறுபான்மையினர் அணி துணைத் தலைவர் முனவரி பேகம்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் இந்தியாவில் வசிப்பவர்களுக்கு பாதிப்பில்லை என பாஜக சிறுபான்மையினர் அணி தேசிய துணை தலைவர் முனவரி பக்கம் தெரிவித்தார்.

இதுகுறித்து தருமபுரியில் புதன்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்தியாவில் வசிப்பவர்களுக்கு பாதிப்பு இல்லை. முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வர வலியுறுத்தினர். இந்திய விடுதலைக்குப் பின்பு 80 சதவீதம் இந்துக்களும், 20 சதவீதம் இஸ்லாமியர்கள் இங்கு தங்கினர். 

மீதமுள்ள இஸ்லாமியர்கள் பாகிஸ்தான் சென்றனர். மத ரீதியாக துன்புறுத்தப்பட்ட இந்தியாவுக்கு வரும் சிறுபான்மையினருக்கு இந்த சட்டம் குடியுரிமை வழங்குகிறது. வங்காளதேசத்திலிருந்து பல கோடி பேர் இந்தியாவில் சட்ட விரோதமாக குடியேறியுள்ளனர். இதே போல மியான்மாரிலிருந்து சட்ட விரோதமாக பல லட்சம் மக்கள் இந்தியாவில் குடியேறியுள்ளனர். இத்தகைய சட்ட விரோத குடியிருப்பை இந்த சட்டம் முறைப்படுத்துகிறது. 

அதேவேளையில் இந்தியாவில் வசிப்பவர்களுக்கு இந்த சட்டத்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. ஆனால் தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து வாக்கு வங்கி அரசியல் செய்துவருகிறார். இதேபோல் என்ஆர்சி அஸ்ஸாம் மாநிலம் தவிர வேறெந்த மாநிலத்திலும் அமல்படுத்தப்படாது. இலங்கை தமிழர்களுக்கு இங்கு குடியுரிமை வழங்க அந்த நாட்டு சட்டம் இடம் அளிக்கவில்லை. 

அதே நேரத்தில் இலங்கையில் தமிழர்களுக்கு 14 ஆயிரம் வீடுகள் இந்திய அரசு வழங்கியுள்ளது என்றார். தருமபுரி மாவட்ட பாஜக தலைவர் எல்.அனந்தகிருஷ்ணன், முன்னாள் மாவட்டத் தலைவர் வரதராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com