சிவகங்கை மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் தேர்தல் மூன்றாவது முறையாக ஒத்தி வைப்பு

பெரும்பான்மை உறுப்பினர்கள் கலந்து கொள்ளாததால் சிவகங்கை மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் தேர்தல் ஒத்தி வைப்பதாக மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன்அறிவித்தார்.
சிவகங்கை மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் தேர்தல் மூன்றாவது முறையாக ஒத்தி வைப்பு

பெரும்பான்மை உறுப்பினர்கள் கலந்து கொள்ளாததால் சிவகங்கை மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் தேர்தல் ஒத்தி வைப்பதாக மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன்அறிவித்தார்.

சிவகங்கை மாவட்ட ஊராட்சிக்குள்பட்ட 16 வார்டுகளுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த டிசம்பர் மாதம்  நடைபெற்றது. இதில், அதிமுக கூட்டணி 8 இடங்களிலும், திமுக கூட்டணி 8 இடங்களிலும் வெற்றி பெற்று சம அளவில் உள்ளன. 

இந்நிலையில், இரு கட்சியினரிடமும் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பதவிக்கு பெரும்பான்மை உறுப்பினர்கள் இல்லாத நிலையில், கடந்த ஜன. 11 ஆம் தேதி மறைமுக தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் பங்கேற்பதற்காக ஒரு சில உறுப்பினர்கள் மட்டுமே வந்திருந்தினர்.மேலும், திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் சார்பில் 15 ஆவது வார்டில் வெற்றி பெற்ற ஆரோக்கிய சாந்தா ராணியைக் காணவில்லை என அவரது மகன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு அளித்திருந்தார்.

நீதிமன்ற உத்தரவின் பேரில், அவரை மீட்டு போலீஸார் மாவட்ட ஆட்சியர் ஜெ. ஜெயகாந்தனிடம் ஒப்படைத்தனர்.

அவரிடம் நடத்திய  விசாரணைக்குப்பின் போதிய உறுப்பினர்கள் பங்கேற்காததால் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலை ஒத்தி வைப்பதாக ஆட்சியர் அறிவித்தார்.

இந்நிலையில், ஜன. 11 ஆம் தேதி தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவி ஏற்காத பகுதிகளுக்கு ஜன. 30 ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.இதையொட்டி, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற இருந்த மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் தேர்தலில் பங்கேற்பதற்காக திமுக கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் 8 பேரும் குறித்த நேரத்துக்குள் வந்தனர். 

ஆனால் அதிமுக உறுப்பினர்கள் யாரும் வரவில்லை. ஆகவே பெரும்பான்மை உறுப்பினர்கள் இல்லாததால் தேர்தலை இரண்டாவது முறையாக ஒத்தி வைப்பதாக மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் அறிவித்தார்.

இதையடுத்து, அன்று மாலை நடைபெற இருந்த துணைத் தலைவர் தேர்தலை புறக்கணிப்பதாக திமுக உறுப்பினர்கள் அனைவரும் கூட்டரங்கை விட்டு வெளியேறினர்.

இதேபோன்று, மார்ச் 4, நடைபெற இருந்த மறைமுக தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் 8 பேரும் வந்திருந்த நிலையில், அதிமுக கூட்டணி கட்சி உறுப்பினர்கள் யாரும் வராததால் மூன்றாவது முறையாக மறைமுக தேர்தலை ஒத்தி வைத்து சிவகங்கை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ஜெ. ஜெயகாந்தன் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இதையடுத்து, மாலை நடைபெற இருந்த துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலை புறக்கணித்து திமுக உறுப்பினர்கள் கூட்டரங்கை விட்டு வெளியேறினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com